பக்கம்:வாழையடி வாழை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 85

'ஆடை, அணிகலன், ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும்
அஞ்சுவதும், நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும்
கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி’

—பாரதிதாசன் கவிதைகள் : வீரத்தாய்


என்று பெண்கள் நிலையினைக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், இந்நிலை அறவே கடியப்பட வேண்டும் என்பதனையும் கடுமையான குரலில் முழங்குகின்றார். பாரதிதாசனார் பெண்ணைத் துாற்றும் பேயர்களைப் பின்வருமாறு சாடுகின்றார்:

'பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாஎன் கின்றீரோ?
மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே’

'ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைமைதான் ஆடவர்க் கும்உண்டு
புலன் அற்ற பேதையாய்ப் பெண்ணைச்செய்தால்அந்
நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே!’

—பாரதிதாசன் கவிதைகள் : சஞ்சீவி பர்வதத்தின் சாரல்


என்ற பாடலில் பெண்ணின் பேதைமை நீங்கப் பெரிதும் முயல வேண்டும் என ஆடவரை அழைக்கின்றார் கவிஞர்; எனவே, பெண் கல்வியினை வற்புறுத்திப் பேசுகின்றார்; குடித்தனம் பேணுவதற்கும் மக்களைப் பாதுகாப்பதற்கும், உலகினை உணர்ந்து கொள்வதற்கும், கல்வியைப் போற்றுதற்கும் பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்று கூறுகின்றார்,

'கல்வியில் லாத பெண்கள் களர்கிலம் அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/87&oldid=1350031" இலிருந்து மீள்விக்கப்பட்டது