பக்கம்:வாழையடி வாழை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்றைய இலக்கியங்கள் 7 நேர்ந்தது. பழைய புறநானூற்றின் போர்ப்பரணி யினைப் படிக்கும்பொழுது அந்த அஞ்சாத வீர உணர் வினைப் பாராட்டி மகிழ்கிறோம்; ஆனால், இன்றைய கவிஞர்களின் புதிய போர்ப்பரணி கேட்டுப் பூரித்துத் தோள் தட்டி நெஞ்சு நிமிர்ந்து கிளர்ந்து எழுகின்றாேம்;உணர்ச்சியோடு உணர்ச்சியின் வடிவத்தினையும் இன்றைய இலக்கியங்கள் வாயிலாக நாம் பெறுகின்றோம். பூங்காவினைப் போல் அழகும் கவர்ச்சியும் தரு வது மட்டுமின்றிக் காய்கறித் தோட்டங்களைப்போல் நல்ல பயனும் தருவதே இலக்கியம்," என்பர் 'வில்லி யம் டெம்பிள்.' எனவே, பழைய இலக்கியங்கள் நமக்குப் பொருட்காட்சிக்கூடம் (Museum)போன்று விளங்குகின்றன. அவற்றில் பழைய காலத்தின் பழுதி லாத் திறத்தினைப் பார்த்து மகிழலாம்; அன்றைய நிகழ்ச்சிகளால் நிகழ்ந்தவற்றினைப் பற்றிய அறிவினைக் கண்டு தெளியலாம். அம்மட்டே நாம் பெறுவது. ஆனால்,இன்றைய இலக்கியங்கள் இன்றைய பொருட் காட்சிச் சாலைகள் (Exhibitions) போன்று நமக்குப் பயன் படுகின்றன. உள்ளம் தோய்ந்து உள மகிழ்வோடு கண்டு மகிழத்தக்க முறையில் இவை அமைந்துள்ளன. பழைய இலக்கியங்களில் கற்பனையின் சிறப்பினை_ஆற்றலினை-எண்ணி வியந்து மகிழலாம்; புதிய வற்றில் மகிழ்வோடு பயனும் பெறலாம்.

நாம்,நம் தந்தையாரும் பாட்டனாரும் சேர்த்து வைத்துவிட்டுச் சென்ற செல்வத்தோடு-சொத்தோடு_நிற்பதில்லை. ``சேரச்சேரச் சேர்ப்பதில் ஆசை” எழு கிறது அன்றாே? அதுபோலவே புதிய இலக்கியப் படைப்புகளை முயன்று படைக்க வேண்டும். படைக்கும் திறன் எல்லார்க்கும் எளிதில் வந்துவிடாது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/9&oldid=1332298" இலிருந்து மீள்விக்கப்பட்டது