பக்கம்:வாழையடி வாழை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 89

'புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உ டம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும்மூ தாட்டி;
மதியல்ல முகம்அ வட்கு;
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
"இருக்கின்றாள்" என்ப தொன்றே.’

—குடும்ப விளக்கு: முதியோர் காதல்:


இவ்வாறு அன்புள்ளம் கண்டு அகத்தின்பம் காண்கின்ற வாழ்வு; அமைதிப் பெருவாழ்வு. இந்த வாழ்வு வந்தால், பின் நமக்கு வேறென்ன வேண்டும்?

அடுத்து, பாரதிதாசனாரின் தமிழ்ப் பற்றினைக் காண்போம்: அவர் தமிழின்பால் கொண்ட பெருமதிப்பினைப் 'பற்று' என்ற சொல்லால் தளையிட்டு விடலாகாது. அவருடைய ஆழ்ந்த பற்றினை —தமிழ் நெறியாம் பண்பினை —அவர்தம் பாக்கள் பறைசாற்றுகின்றன.

'என் தாய்மொழிக்குப் பழி வந்தால், சகிப்ப துண்டோ?’ என்று கூறும் கவிஞர்,

'கனியிடை ஏறிய சுளையும் —முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் —காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
கணிபசு பொழியும் பாலும் —தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் —தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!'

—பாரதிதாசன் கவிதைகள் 1


என்று தமிழினைத் தம் இனிய உயிரெனவே எண்ணுகின்றர். தமிழனை வளர்க்கும் தமிழை, உயிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/91&oldid=1461267" இலிருந்து மீள்விக்கப்பட்டது