பக்கம்:வாழையடி வாழை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

‘வாழையடி வாழை’

உணர்வை வளர்க்கும் தமிழை, 'இன்பத்தமிழ்' எனப் பாவிசைத்து இறும்பூ தெய்துகின்றார் கவிஞர்.

‘தமிழுக்கும் அமுதென்றுபேர் —அந்தத்
தமிழ்இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர்
தமிழுக்கு நிலவென்றுபேர் —இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்குநீர்!
தமிழுக்கு மணமென்றுபேர்! — இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்தஊர்!
தமிழுக்கு மதுவென்றுபேர்! —இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்குவேர்!”

—பாரதிதாசன் கவிதைகள் 1


இத்தகு சிறந்த இன்பத்தமிழினை யாவரும் கற்றால் துன்பங்கள் நீங்கி, நெஞ்சில் சுகம் வந்து, தூய்மையும் வீரமும் வளரும் என்று பாரதிதாசனார் தமிழார்வம் தழைக்கக் குறிப்பிடுகின்றார். 'தனிமைச் சுவையுள்ள சொல்லை, எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை’ என்று மார் தட்டிச் சொல்கிறார்.

மேலும், 'கன்னற் பொருள் தரும் தமிழே! நீ ஒர் பூக்காடு; நானோர் தும்பி!” என்று தம்மைக் 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!'யெனக் கூறிக் கொள்கிறார்.

‘தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும்விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும்தொடேன்!

—இசையமுது : தமிழன்


என்று ஆவேசமாகத் தமிழ்ப் பகைவர்களைச் சாடும் கவிஞர், 'வெண்ணிலாவும் வானும் போல, வீரனும் கூர் வாளும் போல, வண்ணப்பூவும் மணமும் போல, மகர யாழும் இசையும் போல, கண்ணும் ஒளியும் போல, கன்னல் தமிழும் தாமுமாகக் கூறிக் கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/92&oldid=1461268" இலிருந்து மீள்விக்கப்பட்டது