4 கொண்டை கட்டி வேளாளர் வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் ம ம் எனது முன்னோர்கள் 'கொண்டை கட்டி வேளாளர்' என்னும் பிரிவைச் சார்ந்தவர்கள் ஆவர். ஒவ்வொரு ஊரிலும் கொண்டை கட்டி வேளாளர்கள் பெரும் நிலங்களை உழுவித்துண்போராகவும், மிகுந்த செல்வம் செறிந்தவர் களாகவும், பிறர்க்கு வழங்கும் வள்ளன்மை கொண்டவர் களாகவும் இருந்துவந்த காரணத்தால், மற்றக் குடிமக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் தகைமையினராக இருந்துவந்திருக் கின்றனர். ஊர்ச்செயற்பாடுகளில் முதன்மை வகித்தல், ஊர் வாழ்க்கை முறையைச் செம்மையாக்குதல், நியாயம் வழங் குதல், குற்றவாளிகளைத் தண்டித்தல் போன்ற பணிகளில் கொண்டை கட்டி வேளாளர்களே ஊருக்கு ஊர் பெரும்பங்கு கொண்டிருந்திருக்கின்றனர். கொண்டை கட்டி வேளாளர்கள் யாருக்கும் தலைவணங் குவதில்லை என்ற செம்மாந்த வாழ்க்கையை நடத்தி வந்த தால், முடிதிருத்தம் செய்வோரிடத்திலும், தாங்கள் தலை தாழ்ந்து செயல்படக் கூடாது என்று கருதி, தலையின் முன்பகுதியைச் சிரைக்காமல் அவர்கள் தங்கள் தலைமுடியை முழுக்கொண்டையாகக் கட்டி முடித்துக்கொண்டு வாழ்ந் தார்கள். அது காரணம் பற்றித்தான், அவர்களுக்குக் 'கொண்டை கட்டி வேளாளர்' என்ற பெயர் ஏற்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் பகர்வர். வேளிர் சங்க காலத்திலும், அதனைத் தொடர்ந்து வந்த காலத் திலும் கொடுப்பவர்கள் உயர் குடியினராகவும், வாங்கு பவர்கள் தாழ்ந்த குடியினராகவும் கருதப்பட்டனர். ஒளவை மூதாட்டியாரும் “இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்" என்று குறிப்பிட்டிருப்பது கூர்ந்து நோக்கத் தக்கது. கொண்டை கட்டி வேளாளர்கள் பெரும் நிலக்கிழார் களாக வாழ்ந்த காரணத்தால், பிறர்க்கு உணவுப் பொருள்
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/13
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
