142 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் அவர் 'மனோன்மணியம் என்ற நாடகக் காவியத்தின் பாயிரப்பகுதியில் பாடியுள்ள தமிழ்த்தாய் வணக்கந்தான் இப்பொழுது தமிழ்ப்பெருங்குடிமக்களால் சிறப்பாக எங்கணும், எப்பொழுதும் பாடப்பட்டு வருகிறது. அவரது தமிழ்த்தாய் வணக்கப்பாடலின் முதல் ஆறு அடிகளில், கடலால் சூழப்பட்டுள்ள உலகம் தாயாகவும் அதில் உள்ள பரதகண்டம் அத்தாயின் திருமுகமாகவும், தக்காணமாகிய தென்னாடு அத்திருமுகத்தில் அழகுற அமைந்துள்ள நெற்றியாகவும், தமிழ்த்திருநாடாகிய திராவிட நாடு அந்நெற்றியில் விளங்கும் திலகமாகவும் தமிழ்மொழி அத்திலகத்திலிருந்து எழும் நறுமணமாகவும் உருவகித்துக் கூறப்பட்டுள்ளது. "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும், சீராரும் வதனம்எனத் திகழ்பரத கண்டம் அதில், தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதில் சிறந்த திரவிடநல் திருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்து உலகும் இன்பம்உற, எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!" என்பது அந்தப்பாடலின் வரிகள் ஆகும். - அடுத்துக் காணப்படும் ஆறு அடிகளில், பல உயிர்களும், பல உலகுகளும் அவ்வப்போது ஆக்கப்பட்டு, அளிக்கப் பட்டு, பின்னர் அழிக்கப்பட்டாலும், ஒரு எல்லையற்ற பரம்பொருள் எப்போதும் இருந்தபடியே இருந்துவருவது போல், கன்னடம் - தெலுங்கு மலையாளம் - துளு போன்ற மொழிகள் உன் வயிற்றிலிருந்து தோன்றி ஒன்று பலவாக ஆன நிலையிலும், ஆரிய மொழி உலக வழக்கிலிருந்து மறைந்து, அழிந்து, ஒழிந்து போனதுபோல், எந்த வகையிலும் சிதைந்து சீரழியாத உன்னுடைய சீரிய இளமைத் தன்மையை
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/155
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
