150 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் திடுக்கிடும் செய்தி! மறக்கமுடியாத சம்பவம்! மனத்தைக் குழப்பும் நிகழ்ச்சி!" கு அழகிரிசாமியின் குடும்பம் கடன்பட்டிருந்ததை எண்ணி, அறிஞர் அண்ணா அவர்களும், நானும் 1949 மே 29ஆம் நாளன்று, தஞ்சை அரண்மனைத் திடலில், கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணன் அவர்களின் 'கிந்தனார்' கலைநிகழ்ச் சிக்கு ஏற்பாடு செய்தோம். அதன்மூலம் ரூ.6000/- நிதி திரட்டப்பட்டது. அந்தத் தொகையை அறிஞர் அண்ணா அவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்திடம் ஒப்படைத்தார். தஞ்சை சுடுகாட்டில் அழகிரிசாமியின் கல்லறையில் நினைவுச் சின்னம் ஒன்று எழுப்பப்பட்டது. பட்டுக் கோட்டையில் அவரது திருஉருவச் சிலை திறந்து வைக்கப் பட்டது. பெரியார் இராஜாஜியைத் தனியாகக் காணுதல் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜாஜி அவர்கள், 1948இல் சென்னைக்கு வருகை தந்தபோது, அவருக்கு எதிராகக் கழகத் தோழர்கள் அனைவரும் கறுப்புக் கொடி காட்டவேண்டும் என்று அறிக்கை விட்ட பெரியார் அவர்கள் 1949இல் இராஜாஜி அவர்கள் திருவண்ணா மலைக்கு வந்தபோது, அவரைத் தனியாகக் கண்டு தனித்து உரையாட முயன்றார். 1949 மே 14இல், இராஜாஜி அவர்கள் திருவண்ணா மலைக் கோயிலில், இரமணர் தங்கியிருந்து தவம்செய்த பாதாளலிங்கக் குகையின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்தார். அப்போது அவர் வந்த இரயில் சலூனில், அவரைக் காணப் பெரியாருக்கு இசைவு தரப்பட்டிருந்தது. அப்படியொரு செய்தி நாளிதழ்களில் வெளிவந்ததைக் கண்டு அறிஞர் அண்ணா, நான், சம்பத், (கலைஞர்)
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/163
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
