திராவிடர் கழகம் 161 பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த ஏச்சும். வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை. - பல நெருக்கடிகளைப் பார்த்திருக்கிறோம்-பல ஆபத்து களைச் சந்தித்திருக்கிறோம்! ஆனால், இந்தப் பேரிடியை நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை முடியாது! முடியவே முடியாது! உறுதியாக முடியாது! பெரியார் நம் முகத்திலே கரி பூசிவிட்டார்! நமது மூக்கை அறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து முக்காடிட்டுக் கதறுகிறோம், சேதி தெரிந்தது முதல்! நாம் வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண! வேதனைப் படுகிறோம் தனிமையிலே! அந்தோ! எவ்வளவு பெரிய தாக்குதல்! எத்தனை அவமானம் தரும் செயல்! இதற்காகவா இவ்வளவு எழுச்சி பெற்றோம்? இப்படிப்பட்ட ஒரு பழியை ஏற்றுக் கொள்ளவா இந்த அளவு வளர்ந்தோம்? என்னே நம் நிலை! என்னே நம் கதி! எங்கே நமக்குப் புகலிடம்? என்னதான் நமக்கு எதிர்காலம்? எதிரே பெரும் இருள்! சுற்றிலும் கேலி பேசுவோர்! இடையே நாம்! நெஞ்சிலே பெரும் வேதனை! கண்களிலே நீர்! கை கால்களிலே நடுக்கம்! இதுதான் இன்றைய நமது நிலை! எத்தனை ஆயிரம் காரணங்களைக் காட்டினாலும், எவ்வளவு சமாதான விளக்கங்களைக் கூறினாலும், 71-26! இதை மறுக்க - மறைக்க மறக்க முடியாதே! இது பொருந்தாத் திருமணம்தான் என்பதை எப்படி மறுக்க முடியும்? - பெரியாரின் உடற்பாதுகாப்புப் பணிபுரிய நான்நீயென்று போட்டி போட்டுக் கொண்டு வர, நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் கழகத்தில் இருக்கவே
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/174
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
