திராவிடர் கழகம் 167 முதலில் ஒரு வேண்டுகோள் விடுவது என்ற முடிவுக்கு, அறிஞர் அண்ணா அவர்கள் வந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் வெளியிட்ட வேண்டு கோளின் சுருக்கம் வருமாறு : "பெரியாரின் பொருந்தாத் திருமணமோ நடந்தேறிவிட்டது! குழப்பமும், கலக்கமும், பரபரப்பும் கலந்த ஆயிரக்கணக்கான கழகத் தோழர்கள் திகைப்பும், நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இனிச் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றி அவசரமும், ஆத்திரமும் கொள்ளாமல், தூண்டிவிடுவோர் - தூபமிடுவோர் - சிண்டு முடித்துவிடுவோர் - கண்டதைக் கிளறிப் பார்ப்போர் - சந்தி சிரிக்க வைப்போர் என்போர்க் கெல்லாம் இரையாகாமல், நாம் சிந்தித்து எதையும் முடிவு செய்யவேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்தப் பொருந்தாத் திருமணம் இயக்கக் கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டது. இயக்கத்தைச் சீரழித்துச் சிதைக்கக் கூடியது. எனவே, இச்செயலை வேண்டாம் - வேண்டாம் என்று கழகத்தவர் ஆயிரமாயிரம் பேர்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பிறகும், விடாப்பிடியாகச் செய்து முடித்துவிட்ட வரின தலைமையின்கீழே இருந்து இனி நாம் பணியாற்ற முடியாது. இனி, அவருடைய தலைமையிலே கழகம் இருக்கும் வரை, கழகப் பணியிலிருந்து விலகியே இருப்போம் என்ற கருத்தை முன்பே கழகத்தைச் சேர்ந்த பலரும் தெரிவித்துவிட்டோம். அதே முறையில், மேலும் எவ்வளவு கழகங்கள் - தோழர்கள் இதே கருத்தைக் கொண்டுள்ளனர் என்பதை அறிய ஆவல் கொண்டவனாக இருக்கிறேன். இதனை அறியப் பொதுக் கூட்டங்கள் போடுவதோ, கண்டன அறிக்கைகள் வெளியிடுவதோ, மறுப்புகள் தெரிவிப்பதோ நிலைமையைத் தெளிவுபடுத்தாது.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/180
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
