பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிடர் கழகம் 171 அந்த நாளிதழ் 'மாலைமணி' என்ற பெயரில் வெளியிடப் படலாம் என்ற கருத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தெரிவித்தார் 1949 ஆகஸ்டு 10ஆம் நாள், 'மாலைமணி'யின் முதல் இதழ் வெளிவந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் அதன் ஆசிரியராகவும், நான் அதன் தலைமைத் துணை ஆசிரியராகவும், காஞ்சி கலியாண சுந்தரம், பூ.கணேசன், ஏ.கே. வேலன், நாகபூஷணம் ஆகியோர் துணை ஆசிரியர்களாகவும், மா.செங்குட்டுவன், இறைமுடி மணி கியோர் பிழை திருத்துவோராகவும் பொறுப்புகள் ஏற்றுக்கொண்டோம். 'மாலைமணி' நாளிதழுக்குக் கழகத்தோழர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அறிஞர் அண்ணாவின் எண்ணங் களையும், அண்ணாவைச் சார்ந்த கழகத் தோழர்களின் நடவடிக்கைகளையும் நாட்டினர் நன்கு அறிந்துகொள்ள, அந்த ஏடு நல்லதொரு கருவியாக அமைந்தது. 'மாலைமணி' அலுவலகத்தின் மாடிப்பகுதி, கழகத்தின் தற்காலிகச் செயலகமாகச் செயல்பட்டு வந்தது. கழகத் தோழர்களின் இரு வேறு செயல்திட்டங்கள் பெரியாரை விட்டுப் பிரிந்து வந்த கழகத் தோழர்கள், இரு பிரிவினராக இருந்து, இருவேறு செயல்திட்டங்களை வற்புறுத்தி வந்தனர். அறிஞர் அண்ணாவும், அவரைச் சார்ந்து நின்ற என்னைப் போன்ற சிலரும், திராவிடர் கழகத்தைப் பெரியாரிடம் அப்படியே விட்டுவிட்டு, நமக்கு என்று புதிய பெயர் கொண்ட அமைப்பு - புதிய கொடி-புதிய சட்ட திட்டம்- புதிய நெறிமுறைகள் ஆகியவற்றைக்கொண்ட புதிய கழகத்தைத் தோற்றுவித்துக்கொண்டு நாம் கழகப்