பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.மு.கழகம் 195 அவர்களது குடும்பத்தைப்போல எனது குடும்பமும் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பமாகும். தாய் தந்தையார், தம்பி ஆகியோரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்ததை நான் உணர்ந்தேன். அதேபோன்று, என் தாயார், தம்பிகள், தங்கைகள் ஆகியோரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. திருமணம் ஆனபிறகும் அவரவர் குடும்பங்களைத் தனித்தனியாக அவரவரும் பொறுப்பேற்று முடிந்த அளவுக்குப் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற முடிவில் இசைந்திருந்தோம். சூழ்நிலைகள் சரிப்பட்டு வரும்போது, தனிக் குடித்தனம் நடத்தலாம் என்றும், அதுவரையில் இருவரும் அவரவர் குடும்பத்தோடு ஒன்றி இருந்து குடும்பங்களைக் கவனித்து வரலாம் என்றும் முடிவு செய்து கொண்டோம். நான் அவர்களின் குடும்பத்தாரிடம் பேசும்போது, திருமணத்தை மிக எளியமுறையில் சிக்கனமாக, ஆடம்பரம் ல்லாத வகையில் நடத்தலாம் என்றும், பெண்வீட்டி லிருந்து எந்த வம்மை வரிசைகளோ, குடும்பவாழ்வுக்கான பாத்திர பண்டங்கள், நகைநட்டுக்கள், மரச்சாமான்கள் போன்றவையோ எனக்கு வேண்டாம் என்றும், அவற்றிற்காகப் பணத்தைச் செலவழிக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டேன். அதுபோலப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வில்லை. திருமணம் சேலத்தில் பெண்வீட்டில் நடைபெற்றது. பெண்வீட்டாரையும், எங்கள் வீட்டாரையும் சேர்ந்த மிக நெருங்கிய உற்றார் உறவினர்கள் மட்டும் திருமணத்திற்கு வருகை தந்திருந்தார்கள். நான் கழகத் தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் திருமண அழைப்பிதழை அனுப்ப வில்லை.மிகவும் நெருங்கிப் பழகியவர்கள் என்ற முறையில், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,