தி.மு.கழகம் 205 மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருச்சி மாவட்ட தி.மு.கழகத்தினரும், நடிகர் யதார்த்தம் பொன்னுச்சாமியும் இணைந்து செய்தார்கள். விழாவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கலந்து கொண்டார்கள். விழாக்குழுவினர் சார்பாக நான் புரட்சிக் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி ஒன்றினையும் அளித்தேன். மாவட்டக் கழகத்தின் சார்பாக அன்பில் தருமலிங்கம் பாராட்டு மடல் ஒன்றினைப் படித்து அளித்தார். விழாவில் நான், திருக்குறள் முனிசாமி, நாமக்கல் செல்லப்பா, பேராசிரியர் இலக்குவனார், புலவர் அரங்கசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம், கவிஞர் சிவப்பிரகாசம், கவிஞர் வாணிதாசன், கவிஞர் முடியரசன் போன்றோர் கலந்துகொண்டு புரட்சிக் கவிஞரைப் பற்றியும், அவரது கவிதை நயங்களைப் பற்றியும் சொற்பொழிவாற்றினோம். விழாவில் நான் பேசும் போது, “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு" என்று எப்பொழுதும் முழங்கிக் கொண்டிருக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு பெருங்கவிஞராவார். பாரதியார் புது நெறி காட்ட வந்த புதுமைக் கவிஞர் என்றால், பாரதிதாசன் புரட்சி நெறி காட்ட வந்துள்ள புரட்சிக் கவிஞர் ஆவார். புரட்சிக் கவிஞர் அவர்கள், கவிதைகளில் புதிய பாங்கையும், புதுமை நெறியையும் புரட்சிக் கருத்துக்களையும் புகுத்தியவர்; அவர் பல பொருள்களின் அழகையும், அருமைகளையும், சிறப்பையும். செம்மையையும் படம்பிடித்துக் காட்டியவர்! வேண்டத்தகாத பழைமைகளைச் சாடுபவர்! வேண்டத்தகுந்த புதுமைகளை உணர்த்துபவர்! பாராட்டத்தக்க பழைமைகளையும், வரவேற்கத்தக்க
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/218
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
