220 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் மிகவும் குறைந்தவன். இவையெல்லாவற்றையும்விட தைரியத்திலே மிகமிகக் குறைந்தவன். ஆனால் என்னைச் சூழ்ந்திருக்கும் தம்பிகளின் தைரியத்தை நம்பித்தான் நான் பணியாற்றி வருகிறேன்" என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறியது மட்டுமல்லாமல், மாநில அரசியல் நிலை, மத்திய அரசியல் நிலை, பொருளாதார வீழ்ச்சி, தென்னாடு பல வகைகளிலும் தேய்ந்துவரும் தன்மை, கழகத்தைக் கட்டுக்கோப்போடு வளர்க்க வேண்டிய இன்றியமையாமை ஆகியவை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். மூன்றாம் நாள் மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தலைவர்களின் படங்கள் திறக்கப்பட்டன. நான்காம்நாள் மாநாட்டில், சிறப்புச் சொற்பொழிவுகள் கழக முன்னணிப் பேச்சாளர்களால் ஆற்றப்பட்டன. இறுதியில் அறிஞர் அண்ணா அவர்கள் முடிவுரை நிகழ்த்தும்போது, கழகம் பொதுத்தேர்தலில் யார் யாரை ஆதரிக்கவேண்டும் என்ற பட்டியலைப் படித்துக் காட்டி னார். கம்யூனிசுட்டுக் கட்சியினர், கழக உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பம் இடாததால், அவர்களை ஆதரிப்பதற்கில்லை என்று அறிவித்தார். நான்கு நாட்களிலும், நடிப்பிசைப்புலவர் இராமசாமி குழுவினர் நடித்த, சந்திரோதயம், ஜமீன்மாளிகை நாடகங்களும், கலைஞர் கருணாநிதி எழுதி நடித்த இளைஞன் குரல் நாடகமும், பெண்கள் நடித்த போராட்டம் என்ற நாடகமும், குலமுலேனி பில்லா என்ற தெலுங்கு நாடகமும், கலைவாணர் என்.எஸ். கிருட்டிணன் அவர்களின் கலைநிகழ்ச்சியும், எம்.எம்.தண்டபாணி தேசிகர், சி.எஸ். செயராமன், டி.வி.நமசிவாயம், கஸ்தூரி,
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/233
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
