தி.மு.கழகம் 247 வெள்ளுடையான் கோயிலில், வீரரெல்லாம் கூடிப் புதிய பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம். புன்சிரிப்புத் தவழும் முகமும், புதுமை வேகமும் நிறைந்த தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் கழகத்தைக் கட்டிக்காக்கும் பெரும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுவிட்டார். நாவலர், நல்லவர், நற்றொண்டர் என்றெல்லாம் தோழர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர். அத்தகைய இளவல், திருவும், உருவும் கொண்டு பரிமளிக்கும் தென்னகத்து அரசியல் இயக்கத்தின் தலைமை நாற்காலியில் அமர்த்தப்பட்டு விட்டார். வரலாற்றில் இடம் பெறக்கூடிய இந்தப் பொதுக் குழுவை மாடமாளிகைகளும், கூட கோபுரங்களும், மணி மண்டபங் களும் நிரம்பிய சிங்காரச் சென்னையில், வேறு இடத்திலும் கூட்டாமல், வெள்ளுடைவேந்தன் - தியாகத் தீபம் தியாக ராயரின் பெயரால் விளங்கும் அறிவுக் கோயிலில் நடத்திட முடிவு செய்த சென்னை மாவட்டக் கழகத்தாரின் சீரிய செயலைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தென்னகத்து அரசியல் வரலாற்றில், தியாகராயரின் திருநாமத்தை, விழிப்புணர்ச்சி கொண்ட எவரும் மறந்து விடமுடியாது. அவரை வெள்ளுடை வேந்தன் என்பர். இது வெறும் அடைமொழி அல்ல-தூய மணி அவர்! அப்பேர்ப்பட்ட ஒரு ஒப்பற்ற தலைவரின் திருமண்டபத்தில் கூடி, வீர இளைஞரைத் தன்னுடைய பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டிருக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகம். இது ஒரு புனிதமான காட்சியாகும்; பூரிக்கக்கூடிய நிகழ்ச்சியு மாகும். தோழர் நெடுஞ்செழியன் பல்கலைக் கழகத்தில் பெற்ற பட்டத்தைக் கொண்டு, உத்தியோக வேட்டைக்குச் சென்று,
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/260
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
