தி.மு.கழகம் 249 என்னை ஒரே மனதாகத் தேர்ந்தெடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவர்க்கும் எனது உளங்கனிந்த நன்றியை உவகைப் பெருக்கோடு தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தில் பெறற்கரிய பெரும் பேற்றினைப் பெற்றிருக் கிறேன். குருவித் தலையில் பனங்காயை வைத்ததைப் போல, இன்று என்மீது பெருஞ்சுமை சுமத்தப்பட்டிருக் கிறது. இந்தப் பெருஞ்சுமையைத் தாங்குகிற தகுதியும், திறமையும் எனக்கு இருக்கின்றனவா என்பதில் எனக்கு ஐயப்பாடு இருந்து கொண்டிருக்கிறது. அறிஞர் அண்ணாவும், கழகத் தோழர்களும் என்றென்றும், எந்த நிலையிலும் என் பக்கத் துணையாக நின்று, என்னை எல்லா வழிகளிலும், வகை களிலும் காப்பாற்றுவார்கள் என்ற முழு நம்பிக்கையோடுதான் இந்தப் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன். என் கடன் பணிசெய்து கிடப்பதே! தங்கடன் என்னையும் தாங்குவதே! என்ற முதுமொழிக்கு இணங்க, ஓயாமல் கழகப் பணிகளைச் செய்வதை என் கடமையாகக் கொள்வேன். அதே நேரத்தில் என்னை எல்லா வகையிலும் தாங்கிப் பிடிப்பதை உங்கள் கடமையாகக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். கழகம் வளரவும், கொள்கை பரவவும், குறிக்கோள் வெற்றி பெறவும் உங்களோடு இணைந்து நின்று தொடர்ந்து பாடுபடுவேன் என்பதில் உறுதிகொள்கிறேன்." என்று குறிப்பிட்டேன். மாவட்டங்கள்தோறும், மாவட்டக் கழக மாநாடுகள் அனைத்தும் நடந்து முடிந்த வுடன், தி.மு.கழக இரண்டாவது மாநில மாநாட்டை, திருச்சி நகரில் நடத்துவது என்றும், அதற்கான முறையில், வரவேற்புக்குழு, பந்தல் அமைப்புக்குழு, விளம்பரக்குழு, நிதிக்குழு, உணவு வழங்கும் குழு, இடவசதிகள் செய்யும் குழு, தொண்டர்
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/262
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
