284 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் கல்லூரியில் படித்த காலம் முதற்கொண்டு, ஓர் ஒழுங்கு முறை தவறாத மாணவராக இருந்து வந்தவர். ஆகையால், தோழர்கள் ஒழுங்குமுறை தவறி, அவருக்கு நிரம்பத் தொல்லைகள் தந்தால், அவற்றை அவர் தாங்கிக்கொள்ள மாட்டார்; அவற்றிற்கு வளைந்து போகவும்மாட்டார். இவ்வளவு தொல்லைகள் இருக்கின்றனவா? என்று அவர் அறிந்தால், மிகவும் சங்கடப்படுவார். அப்படியொரு நிலை ஏற்பட்டால், அவரிடமிருந்து நாம் பெறக்கூடிய அறிவாற்றல் பணிகளை முழு அளவிற்கு நம்மால் பெற முடியாமல் போய்விடும். நாடக மேடையில்கூட ஒருவர் நல்ல பாட்டுக்களைப் பாடிக்கொண்டிருக்கையில், இரண்டாவது முறையும் பாடச்சொல்லி 'ஒன்ஸ்மோர்' என்று கேட்கும்போது, பாடுகிறவருக்கு எவ்வளவோ சங்கடம் இருக்கத்தான் செய்யும். சாதாரண நாடக மேடையிலேயே அப்படிப்பட்ட நிலை இருக்கிறது என்றால், ஒரு பெரிய இயக்கத்தை நடத்திச் செல்லும்போது, பொறுப்பேற்றுக் கொண்டிருப்ப வருக்கு எத்தனை இன்னல்கள் இருக்கும் என்பதை நாம் எல்லோரும் எண்ணிப்பார்க்கவேண்டும். தம்பி என்று அழைப்பதில் நான் பெருமைப்படுகிறேன் தோழர் நெடுஞ்செழியன் எனக்குத் தம்பிதான்! வயதில்! உண்மையில் அவரைத் தம்பி என்று அழைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்! என்னை அண்ணனாகக் கொண் டிருப்பதில் அவரும் பெருமைப்படுகின்றார். ஆனால், அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருக்கின்ற நேரத்தில், அவர் இடுகின்ற ஆணைகள் அத்துணையையும், நான் ஒரு தலைவன் இடுகின்ற ஆணையாக ஏற்று அந்தத் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன் என்பதை, இந்த மாநில மாநாட்டில் நான் உறுதி கூறவிரும்புகிறேன்.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/297
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
