தி.மு.கழகம் 291 படுகொலை செய்தார்கள். அவர் படுகொலை செய்யப்பட்ட துக்கச் செய்தி, மதுரை முத்து அவர்களால் மதுரை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்த எனக்குத் தெரிவிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து, நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அப்பொழுது நான் சோழவந்தானில், ஆவுடையப்பன் அவர்களின் 'பனகல் இல்லம்' வீட்டில் தங்கியிருந்தேன். இரவோடு இரவாக, நானும், மதுரை முத்துவும் காரில் புறப்பட்டுத் தூத்துக்குடிக்குப் போய்ச் சேர்ந்தோம். கே.வி.கே. சாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம். துக்கச் செய்தி கேள்விப்பட்டு தென் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகத் தூத்துக்குடிக்குத் திரண்டு வந்திருந்தனர். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற் காகக் கழக அலுவலகக் கட்டடத்தில், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மாலை 4 மணி அளவில் மாபெரும் இறுதி ஊர்வலம் எனது தலைமையில் புறப்பட்டு இடுகாட்டை அடைந்தது.ஊர்வலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும், கழகத் தோழர்களும் ஏராளமாகக் கலந்து கொண்டனர். இடு காட்டில் எனது தலைமையில் இரங்கல் கூட்டம் நடை பெற்றது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் இரங்கல் உரை ஆற்றினார்கள். கே.வி.கே. சாமி புதைக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஒன்று எழுப்பப்பட்டது. இடத்தில் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்தது.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/304
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
