பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.மு.கழகம் 293 தி.மு.கழகம் போட்டியிடக்கூடிய தொகுதிகளைத் தேர்ந் தெடுக்கவும், வேட்பாளர்கள் பட்டியலைத் தயாரிக்கவும், தனி ஆய்வுக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவிற்கு நான் தலைவராகவும், தோழர்கள் நடராசன், சம்பத், கலைஞர் கருணாநிதி, மதியழகன், ஆசைத்தம்பி, மதுரை முத்து ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்து பணியாற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆய்வுக்குழு தமிழகம் எங்கணும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தகுதிபடைத்த வேட்பாளர்களின் பட்டி யலைத் திரட்டி வந்தது. பின்னர் அறிஞர் அண்ணா அவர்களோடு கலந்துபேசி, போட்டியிடக் கூடிய தொகுதி களையும், வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்தோம். ஆய்வுக்குழுவினரால் தேர்தல் அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டு, அறிஞர் அண்ணா அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. கழக வேட்பாளர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்து வதற்கு என்று, 10.1.57 இல், கோவையில், சிறப்பு மாநாடு ஒன்று கூட்டப்பெற்றது. அந்த மாநாட்டிற்கு நான் தலைமை தாங்கினேன். கழக முன்னணித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அறிஞர் அண்ணா அவர்கள் மாநாட்டின் இறுதியில் நீண்ட பேருரை ஆற்றினார். நான் வேட்பாளர் களின் பட்டியலை மாநாட்டில் வெளியிட்டேன். சட்டமன்றத் தொகுதிகளில், கீழ்க்கண்டவாறு கழகத்தின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். காஞ்சிபுரம் தொகுதியில் அறிஞர் அண்ணா; சேலம் தொகுதியில் நான்; குளித்தலை தொகுதியில்: கலைஞர் கருணாநிதி; எழும்பூர் தொகுதியில் பேராசிரியர் அன்பழகன்; பேசின்பிரிட்ஜ் தொகுதியில்: தொகுதியில்: என்.வி.