பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.மு.கழகம் 295 கொடுத்து வாக்குகளை வாங்கினார். நான் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற விரும்பவில்லை. அதன் காரணமாக நான் 207 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிக்கான வாய்ப்பை இழந்தேன். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சேலத்தில் நடைபெற்றபோது, அறிஞர் அண்ணா வந்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசும் போது, "நான் சேலம் தொகுதிக்குத் தங்கத்தைத் தந்தேன்; ஆனால், சேலம் தொகுதி வாக்காளர்கள் சிலர் அதனைப் பங்கப்படுத்திவிட்டார்கள்!" என்று வேதனையோடு குறிப்பிட்டார். . தி.மு. கழகத்தின் ஆதரவு பெற்று டாக்டர் கிருட்டிணசாமி அவர்களும், சிவராசு அவர்களும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக ஆனார்கள். வெற்றி வீரர்களுக்குப் பாராட்டுக்கூட்டம் 1957-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.கழகத் தின் சார்பாக நின்று வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப் பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம், சென்னைக் கடற்கரையில், எனது தலைமையில் நடை பெற்றது. பாராட்டுக் குறிப்பிட்டவை : கூட்டத்தில் நான் பேசும்போது “நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் மூலம், நமது கழகத்தின் சார்பாக 15 சட்டமன்ற உறுப்பினர்களும், 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெற்றிபெற்று, சட்ட மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் முதன் முதலாக அடியெடுத்து வைக்கிறார்கள்.