310 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் கறுப்புக் கொடி காட்ட இருந்த 6.1.58க்கு முன்னரே, அறிஞர் அண்ணா, நான், சம்பத், மதியழகன், பேராசிரியர் அன்பழகன், கலைஞர் கருணாநிதி, நடராசன் போன் றோரும், எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த பல கழக ன்னணியினரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டோம். நாடு எங்கணும் பல்லாயிரக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். கழகத்தைச் சேர்ந்த கலைஞர்களான புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., நடிப்பிசைப் புலவர் கே.ஆர் இராமசாமி, இலட்சிய நடிகர் எஸ்.எஸ் இராசேந்திரன், நடிகமணி டி.வி. நாராயணசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப் பட்டனர். கழகத்தைச் சேர்ந்த முக்கியமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதிலும், 6.1.58 இல், பண்டித நேரு சென்னைக்கு வருகை தந்தபோது, மீனம்பாக்கம் விமானக் கூடத்திற்கு எதிரிலும், சென்னை அண்ணா சாலையிலும் பதினாயிரக்கணக்கானவர்கள் திரண்டு நின்று கறுப்புக் கொடி காட்டி, எதிர்முழக்கங்கள் எழுப்பி, ஆரவாரித்து நின்றனர். கறுப்புக் கொடி காட்ட முனைந்து திரண்டு வந்தோரின் எண்ணிக்கை கட்டுங்கடங்காமல் போகவே, காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை விட்டும், குதிரைப் படையினரை ஏவிவிட்டும் கூட்டத்தினரைக் கலைக்க முயன்றனர். கூட்டத்தினரில் பலர் படுகாய முற்றனர். என்றாலும் கறுப்புக் கொடி காட்டுவது என்ற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. பண்டித நேருவின் பவனி பல இடங்களில் தடைப்பட்டது. கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தின் எழுச்சியை, அவர் வழிநெடுகக் கண்டுகொண்டே செல்லவேண்டி நேரிட்டது.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/323
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
