பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.மு.கழகம் 319 மாநாட்டில், கவிஞர் கண்ணதாசன் நடித்த 'குற்றம் குற்றமே' என்ற நாடகமும், எம்.என். கிருட்டிணன் குழு வினரின் 'விடைகொடு தாயே' என்ற நாடகமும் நடை பெற்றன. சென்னை மாவட்ட தி.மு.கழக மாநாடு சென்னை மாவட்ட தி.மு.கழக மாநாடு, சென்னையில், 17,18.10.59 ஆகிய நாட்களில் நடைபெற்றது. ய மாநாட்டிற்கு டி.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். அரங்கண்ணல் மாநாட்டைத் தொடங்கிவைத்தார். அறிஞர் அண்ணா, நான், கழகச் சொற்பொழிவாளர்கள் ஆகியோர் சிறப்புரைகள் நிகழ்த்தினோம். மாநாட்டில் கலைஞர் கருணாநிதி குழுவினர் நடித்த 'உதய சூரியன்' நாடகமும், அன்பில் தருமலிங்கம் குழுவினர் நடித்த 'பரப்பிரம்மம்' நாடகமும் நடைபெற்றன. தி.மு.கழகச் செயற்குழு-பொதுக்குழுக் கூட்டங்கள் தி.மு.கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 17.6.60 அன்றும், பொதுக்குழுக்கூட்டம் 18,19.6.60 ஆகிய நாட்களிலும், சேலம் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றன. அறிஞர் அண்ணா, நான், தலைமைக் கழக நிருவாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டோம். கழகப் பொதுச்செயலாளர் என்ற முறையில் கழகத்தின் வளர்ச்சி நிலை, நாட்டின் அரசியல் சூழ்நிலை, காங்கிரசு ஆட்சியின் அடக்குமுறைப் போக்கு ஆகியவற்றை விளக்கிப் பேசினேன்.