340 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் நாடாளுமன்றத்திற்கும் அனுப்பி வைத்திருக்கிறது. கழகம், தனது பாராளுமன்றப் பணியைத் தொடர்ந்து நடத்துவது என்ற முடிவுக்கு வந்துள்ளது. அடுத்துவரும் பொதுத் தேர்தலில், தி.மு.கழகம் தனது கொள்கையை முன்வைத்துப் போட்டியிடும். இன்றைய தேர்தல்முறையில் பெரும்பாலான வாக்குகளைப் பெறமுடியாத காங்கிரசுக்கட்சி, சிறுபான்மை வாக்குகளை மட்டுமே பெற்று, பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி யிருக்கிறது. பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதால், காங்கிரசுக் கட்சிக்கு எதிராக விழும் வாக்குகள் சிதறிப்போய் விடுகின்றன. அதன் காரணமாகக் காங்கிரசுக் கட்சி எளிதில் பதவிக்கு வந்துவிடுகின்றது. இது சனநாயகத்திற்கோ, அரசியல் நேர்மைக்கோ ஏற்றதல்ல. எனவேதான், சனநாயகம் பொருளற்றதாகவும், உயிரற்றதாகவும் ஆகிவிடுகிறது. பலதிறப்பட்ட கொள்கைளைக் கொண்ட சக்திகள் நிலவிவரும் இந்தியா போன்ற நாடுகளில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடைபெற வேண்டும். அப்படி இருந்தால்தான் உண்மையான சனநாயகம் மலரும். அப்போதுதான் எல்லா முக்கியமான கட்சிகளின் கருத்துக்கள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஒலிக்கும். ஏதேச்சதிகார வல்லமையைக் கொண்டிருக்கும் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், நிலைமைக்கு ஏற்றபடி, கட்சிகளின் செல்வாக்குக்கு ஏற்றபடி, தொகுதிகளைப் பங்கீடு செய்துகொண்டு, ஒரு முனையாக நின்று போட்டியிட வேண்டும். அப்பொழுதுதான், வாக்குகள் சிதறிப்போகாமல் இருக்கும். அதுதான் நமக்கு ஏற்றதொரு வழியாக அமையும்!" ய 14,15-7-61 ஆகிய நாட்களில் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளக் கொடுமையால்
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/353
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
