348 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கினார்.கூட்டத்தினர்க்கு, வெற்றிபெற்ற ஐம்பது சட்ட மன்ற உறுப்பினர்களும், ஏழு நாடாளுமன்ற உறுப்பினர் களும் அறிஞர் அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்டனர். அறிஞர் அண்ணா அவர்கள் வெற்றிபெற்றவர்கள் அனை வர்க்கும் பொன்னாடை போர்த்தி, அவர்களை வரவேற்று வாழ்த்திப் பேருரை ஆற்றினார். வெற்றி பெற்றவர்களின் சார்பாக நான் ஏற்புரை வழங்கி, சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கழக உறுப் பினர்கள் ஆற்றப்போகும் பணிகள் பற்றி விரிவாக விளக்கிக் கூறினேன். அன்றே, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அறிவகத்தில்' அறிஞர் அண்ணா தலைமையில் கூட்டப்பெற்றது. சட்டமன்ற தி.மு.க. கட்சியின் நிருவாகி கள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சட்டமன்றக் கட்சியின் தலைவராக நானும், துணைத்தலைவராக, கலைஞர் கருணாநிதியும், செயலாளராக, மதியழ கனும், துணைச்செயலாளர்களாக அரங்கண்ணல், முருகையன் ஆகியோரும், பொருளாளராக முனு ஆதியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக மனோகரனும், துணைத் தலைவராக தருமலிங்கமும், செயலாளராக செழியனும், துணைச்செயலாளராக அரூர் முத்துவும், பொருளாளராக சிவசங்கரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1962 மார்ச்சு 20ஆம்நாள் நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்கும், சட்டமன்ற மேலவைக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மாநிலங்களின் அவை உறுப் பினர்களாக அறிஞர் அண்ணாவும், பேராசிரியர்
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/361
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
