28 ராமசாமி வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் அவர்களையும், பேரறிஞர் அண்ணா அவர்களையும் மதிக்கக் கூடியவர்கள் என்று ஒரு சிலர்தான் இருந்தோம். முதலில் நான், இரா. செழியன், பேராசிரியர் க.அன்பழகன், பூ. கணேசன் மற்றும் சிலர்தான் இருந்தோம். அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில், இரெ.இளம்வழுதி, கே.ஏ.மதியழகன், இராசகோபால், ஆ. வீரபாகு, முத்தழகன், சோலை அரசு, வள்ளலரசு, மா. நன்னன், அரங்கசாமி, வை. கோவிந்தன் போன்ற பல மாணவர்கள் வந்து, எங்களுடன் திராவிட இயக்கத்தை வளர்ப்பதில் ணைந்து செயல்பட்டார்கள். பல்கலைக்கழகத் தமிழ்ப் பட்டிமன்றம் அப்போது ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் கோகலே மண்ட பத்தில், ஏதேனும் நடைமுறையில் இருக்கும் ஒரு அரசியல் கருத்தை விவாதத்திற்குரிய தலைப்பாகக்கொண்டு நடை பெறும். ஒரு சாரார் ஒட்டியும்,மற்றொரு சாரார் வெட்டியும் பேசுவார்கள். தமிழ்ப் பேரவையின் தலைவர் பட்டிமன்றத் திற்குத் தலைமை தாங்குவார். பட்டிமன்றத்தில் வாதாடப் புகும் இரு சாராரும் காங்கிரசு -கம்யூனிஸ்டு மாணவர்களாகவே இருந்துவந்த தால், விவாதங்கள் பெரும்பாலும் சூடாகவோ, மிகுந்ததாகவோ, விறுவிறுப்புக் கொண்டனவாகவோ இருந்ததில்லை. ஒளி மாணவர் க.அன்பழகன் அவர்கள், பள்ளிப்பருவக் காலத்திலேயே பேச்சாற்றல் உடையவராகத் திகழ்ந்த காரணத்தால், அவர் திராவிட இயக்கக் கருத்துக்களைத் துணிவோடு எடுத்துவைக்கப் பட்டிமன்றத்தில் பங்கு கொள்வார். அவர் தன்னந்தனியாக இருந்து பட்டிமன்றத்தில் வாதிட்டுவந்தது, திராவிட இயக்கத்திற்குப் போதுமான வலிவு சேர்க்காததால், நானும் எனது பேச்சாற்றலை
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/37
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
