பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் உலக நாடுகளிடையேயும், ஆசிய நாடுகளிடையேயும், இந்தியத் துணைக்கண்ட நாடுகளிடையேயும் ஒற்றுமை யுணர்வு வலுப்பட வேண்டும் என்பதில், பொருள் இருக்க முடியும். நாடுகள் பலவற்றையும் ஒரே தன்மையனவாக, அதாவது ஒருமைப்பாட்டுத் தன்மை கொண்டனவாக ஆக்கவேண்டும் என்று கூறுவதில் பொருள் இருக்க முடியாது. அடக்குமுறையால் இந்தியா ஒருநாடு என்று ஆக்கப் படுகிறதே அல்லாமல், அன்புடைமையால் அது ஒரு நாடாக ஆகவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், திராவிட இனம் வாழுகின்ற, திராவிட மொழிகள் பேசப்படுகின்ற, திராவிடக் கலைப் பண்புகளைக் கொண்ட, திராவிட வரலாற்றால் உருவான திராவிட நாடு தனியுரிமை பெற்ற தனிநாடாக ஆக வேண்டும், ஆகமுடியும் என்ற கோரிக்கையைத்தான், தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். துணைக்கண்டத்தில் திராவிட நாடும், இந்தியத் அமைந்திருக்கும் பிறநாட்டுப் பகுதிகளும், ஒற்றுமை உணர்வோடு இருக்க வேண்டும் என்ற கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், இந்தியத் துணைக் கண்டத் திலுள்ள நாடுகள் அனைத்தும் ஒருமைப் பாட்டுத் தன்மையைப் பெறவேண்டும் என்று வற்புறுத்துவதை முழு மூச்சோடு எதிர்க்கிறோம். திராவிட நாடு போன்ற பகுதிகள் குறிப்பிட்ட தேசியத் தன்மையைத் தனித் தனியாகப் பெற்று விட்டபிறகு, ஒருமைப்பாடு பற்றிப் பேசுவதற்கு இடம் ஏதுமில்லை. இந்தியா ஒரே ஒரு அமைப்பு - எவ்வகையிலும் பிரிக்க முடியாத ஒரு அமைப்பு என்று சிலர் பேசி வந்தாலும்,