பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.மு. கழகம் 361 அசாம் பகுதியிலுள்ள தீவிரவாதிகள், அசாமைத் தனிநாடாக ஆக்கவேண்டும் என்று கூறி, கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்கெல்லாம் எதிராகக் காரணகாரிய விளக்கத்தோடு பதில் கூறமுடியாத நிலையில் தத்தளித்த மத்திய ஆட்சியினர், தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரால் பிரிவினை கோருபவர்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று முதலில் நினைத்தனர். தேசிய ஒருமைப்பாடு என்ற முழக்கம் பல்வேறு இன மக்களின் இன உணர்வை எவ்வகையிலும் மட்டுப்படுத்த முடிய வில்லை. இந்த நிலையில் சீனப் போர்நிறுத்த அறிவிப்பு வெளிவந்தது.இந்தியாவில் அமைதி நிலை ஏற்பட்டது. அரசியல் கட்சிகள் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கின. திராவிட நாட்டுப் பிரிவினைப் பிரச்சினை போன்ற தனிநாடு கோரிக்கைகளை அடக்குமுறைச் சட்டத்தின் மூலம் நிலையாக ஒடுக்க முடியுமே அல்லாமல், வாதத்தால் ஒடுக்க யலாது என்ற முடிவுக்கு மத்திய ஆட்சியினர் வரலாயினர். சீனப்போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில், பிரிவினைத் தடைச்சட்டம் ஒன்றினைக் கொண்டுவந்து, அதனை நிறைவேற்றி வைக்க மத்திய அரசினர் பெரிதும் முயன்றனர். அந்தப் பிரிவினைத் தடைச்சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 25.1.1963 அன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் அந்தச் சட்டம் விவாதத்திற்கு வந்தபோது, அறிஞர் அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, அந்தப்