தி.மு. கழகம் 407 கோலாலம்பூர் வாழ் தமிழர்கள் சார்பாக எனக்குச் சிறப்பான வரவேற்பினை அளித்து, என்னைப் பெரிதும் போற்றிப் பாராட்டி இருப்பதற்காக என் உளங்கனிந்த நன்றியை உங்கள் அனைவர்க்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் வளம் பலபெற்று, நலம் பல எய்தி வாழ வேண்டும் என்ற என் வாழ்த்தை உவகைப் பெருக்கோடு தெரிவித்துக் கொள்கிறேன்!" . நான் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் பதினைந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முக்கியமான நகரங்களில் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினேன். ஈப்போ, பினாங்கு, ஜோகூர்,காம்பாங்க், கிள்ளாங், மலாக்கா, மூவார், செரம்பான், தைப்பிங் போன்ற நகரங் களில் நடைபெற்ற சிறப்பு வரவேற்புகளில் கலந்து கொண்டேன். இடையிடையே பல சுற்றுலா இடங்களையும் கண்டு களித்தேன். முதல் உலகத் தமிழ் மாநாட்டையொட்டி நான் மலேசியாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் பயன் தருவதாகவும், மகிழ்ச்சி ஊட்டுவதாகவும் அமைந்திருந்தது. திருச்சி - தஞ்சை வட்டார தி.மு.கழக மாநாடு திருச்சி-தஞ்சை வட்டார தி.மு.கழக மாநாடு 1966 சூன் 11, 12 ஆகிய நாட்களில், திருச்சிப் பந்தயத் திடலில் நீலமேகம் பந்தலில், சின்னச்சாமி அரங்கில் நடைபெற்றது. அன்பில் தருமலிங்கம் மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த் தினார். மாநாட்டை சி.வி.எம்.அண்ணாமலை தொடங்கி வைத்தார். மாநாட்டிற்குப் பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/424
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
