தி.மு.கழகம் 415 முன்வந்துள்ள கூட்டணிக் கட்சிகளையும், அவற்றின் தலைவர்களையும் மனமார வரவேற்கிறேன். அவர்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் சமத்துவ அடிப்படையில் இணைந்திருக்கின்றன. கட்சி களிடையே கொள்கை - குறிக்கோள் - திட்டம் போன்ற வற்றில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டின் நலன்கருதி, சனநாயக முறையையும், பண்பையும் காப்பாற்றிட, சர்வாதிகாரப் போக்கினைக்கொண்ட காங்கிர சின் ஆதிக்கத்தை அகற்றும் நோக்கத்துடன்தான், இந்தக் கூட்டணி அமைந்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றும் வாய்ப்பு வசதிக்கு ஏற்பப் போட்டியிடும் தொகுதிகளைத் தேர்ந்தெடுக்கும். தேர்தலில் அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து அனைவரின் வெற்றிக்காகவும் பாடுபடுவர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் வெற்றிபெற, எல்லாக் கட்சியினரும் ஒன்றாக இணைந்து பாடுபடுவோம் வெற்றி நமதே என்ற களிப்போடு பொதுத்தேர்தல் களத்தில் நாங்கள் இறங்குகிறோம்! வாக்காளப் பெருமக்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவு தாரீர்! தாரீர்! என்று இந்த மாநாட்டின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்!" என்று குறிப்பிட்டார்கள் விருகம்பாக்கம் மாநாடு, வரலாற்றில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் மிக்க எழுச்சி யோடும், உணர்ச்சியோடும் நடைபெற்றது. எதிர்காலத்தில்
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/432
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
