தி.மு.கழகம் 425 அண்ணாவை எதிர்கொண்டு வரவேற்று, அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்கள். பின்னர் முதலமைச்சர் அறையில் அறிஞர் அண்ணா சென்றமர்ந்தார். மற்ற அமைச்சர்கள் அனைவரும் அறிஞர் அண்ணாவின் எதிரில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்தோம். நாங்கள் நாற்காலிகளில் அமரும்போது, அறிஞர் அண்ணா அவர்கள், எங்களைப் பார்த்து, "இந்த நாற்காலிகள் நமக்கு என்றும் நிலையானவை என்ற எண்ணத்தில் அமராதீர்கள்! இந்த நாற்காலிகளை விட்டு எந்த ஒரு நேரத்திலும் நாமே எழுந்து செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம்! அல்லது சில எதிர்பாராத சூழ்நிலைகளேகூட நம்மையெல்லாம், இந்த நாற்காலிகளைவிட்டு வெளியேற்றவும் செய்யலாம்! எதற்கும் நாம் மிக எச்சரிக்கையோடுதான் இந்த நாற்காலிகளில் அமரவேண்டும்!' என்று பொறுப்புணர்ச்சியோடு குறிப்பிட்டார். அமைச்சர் பொறுப்புக்களை ஏற்றிருந்த எங்களுக்கு, அறிஞர் அண்ணா அவர்கள் சில அறிவுரைகளைக் கூறினார். அவை வருமாறு:- "அமைச்சர்களாகப் பணியாற்றப்போகும் நீங்கள் எல்லோரும் எளிமையான முறையில் வாழவேண்டும். ஆடம்பரமோ, படாடோபமோ, அகம்பாவமோ, அதிகார தோரணையோ எந்த வகையிலும் இருக்கக்கூடாது. பொதுமக்களின் குறைகளையும், அவர்கள் குறிப்பிடும் குற்றங்களையும் பொறுமையாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். அவற்றைச் சட்டநெறிமுறையின் அடிப்படை யிலும், நியாயம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் தீர்த்து வைக்க முயலவேண்டும். ப செய்யவேண்டிய செயல்களை நீங்கள் செய்யத் தவறினாலும் பரவாயில்லை; ஆனால் செய்யத்தகாத செயல்கள் ஏதொன்றையும் செய்துவிடாதீர்கள். 26
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/442
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
