436 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் புகழ் ஓங்குக! அதன் கல்வித் தொண்டுகள் என்றும் வெல்க!" பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் சார்பாக இரவு விருந்து ஒன்று சிறப்பான முறையில் எனக்கு அளிக்கப் பட்டது. அதற்காக, விருந்தின்போது, நான் அனைவர்க்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினேன். தில்லை நடராசர் கோயிலில் வரவேற்பு நான் இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை அமைச்ச ராக இருந்த காரணத்தால், தில்லை நடராசர் கோயிலின் அறங்காவலர்கள், 26.4.67 அன்று மாலை என்னைக் கோயிலுக்கு அழைத்து, எனக்கு வரவேற்பு அளித்தனர். என்னுடன் அறநிலையத்துறையின் ஆணையரும் வருகை தந்தார். கோயிலின் பல பகுதிகளையும் எனக்குச் சுற்றிக் காண் பித்தார்கள்.கோயிலில் தூய்மை காக்கப்படவேண்டியதன் இன்றியமையாமையையும், பொதுமக்களுக்குத் தேவைப் படும் அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டியதன் அவசியத்தையும் நான் வலியுறுத்தினேன். வரவேற்புக் கூட்டத்தில் "நெடுஞ்செழியன் என்ற தனிப்பட்ட முறையில் எனக்குச் சிலகொள்கைகள் உண்டு. நான் ஒரு பகுத்தறிவு வாதியாகத் திகழ்ந்துவருகிறேன். ஆனால், அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற முறையில் எனக்குச் சில பொறுப்புக்களும், கடமைகளும் உண்டு. பகுத்தறிவுக் கொள்கை களுக்குப் பழுது ஏற்படாத வகையில், ஆன்மிகவாதிகளின் நோக்கம் நிறைவேற என் கடமையை ஆற்றுவேன். வலுக்கட்டாயமாக எனது கொள்கையை எவர் மீதும் திணிக்கமாட்டேன். அதேபோது, பொது இடங்களில், எனது கட்சியின் மேடைகளில் எனது கொள்கைகளை வலியுறுத்தி வரவும் தவறமாட்டேன். பொறையுடைமை எல்லா வகையிலும் காப்பாற்றப்படும்" என்று குறிப்பிட்டேன்.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/453
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
