460 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் சிறப்பு ‘ழ’கரத்தையும், சிறப்பு 'ற'கரத்தையும், சிறப்பு ‘ன’கரத்தையும் தனக்கே உரிய எழுத்துக்களாகக் கொண்ட மொழியாகும். உலகமொழிகள் பலவும் 'ந', 'ம' என்ற இரண்டு எழுத்துக் களை மட்டுமே, மூக்கின் துணையோடு பிறக்கும் மெல்லோசை எழுத்துக்களாகக் கொண்டிருக்கின்றன. தமிழ்மொழியோடு தொடர்புகொண்ட வடமொழி 'ங', 'ஞ', 'ண', 'ந', 'ம' என்ற ஐந்து மெல்லோசை எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்மொழி மட்டும் 'ங', 'ஞ', 'ண', 'ந', 'ம', 'ன' என்ற ஆறு மெல்லோசை எழுத்துக்களைச் சிறப்பாகப்பெற்றிருக்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கோண்ட், கூ, ஓராயான் போன்ற பலமொழிகளைப் பெற்றெடுத்த பிறகும், தமிழ்மொழி சீரிளமை குன்றாமல் இருந்துவருகிறது. தமிழ்மொழி வரிவடிவில் எழுத்துக்கள் ஒன்றோ டொன்று பிணையாமல், பிறழாமல் தனித்தனியாக நின்று ஓசையில் ஒன்று சேர்ந்து சொற்களை உணர்த்தும் தன்மையுடைய தாகும். இல்லாத புதிய ஓசையைப் பெறுவதற்கு ஆங்காங்கு, என்ற ஆய்த எழுத்து, உரியமுறையில் பயன்பட்டு வருகிறது. தமிழ்மொழி 'குற்றியலுகரம்' என்ற தனிச்சிறப்புடைய எழுத்துத்தன்மையைக் கொண்டிருக்கிறது. - - உடன்படுமெய் குறில் - உயிர் - மெய் - - இடைச்சொல் உரிச்சொல் சாரியை -> - நெடில் உயிரீற்றுப் புணரியல் - மெய்யீற்றுப் புணரியல் -ஒற்று - எழுவாய் பயனிலை - - செயப்படுபொருள் என்பனபோன்ற இயற்கையோடு இயைந்த காரணப் பெயர்களைக் கொண்டது தமிழ் ஆகும்.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/477
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
