பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.மு. கழகம் 475 அறிஞர் அண்ணா அவர்களின் உடல் அடக்கம் செய்யப் பட்ட இடம், 'அண்ணா நினைவிடம்' என்ற பெயரில் நினைவுச் சின்னமாகத் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. அறிஞர் அண்ணாவின் கல்லறையின் மீது “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது" என்ற சொற்றொடர் செதுக்கி வைக்கப்பட்டது. அறிஞர் அண்ணா மறைவு குறித்த இரங்கல் கூட்டம் அறிஞர் அண்ணா மறைந்தவுடன் 3.2.69 முதல், முழுப் பொறுப்புக்களோடு கூடிய முதலமைச்சர் பொறுப்பை நான் ஏற்றிருந்தேன்.உலகு எங்கிருந்தும் ஏராளமான தலைவர்கள் அறிஞர் அண்ணாவின் மறைவு குறித்து இரங்கற் கடிதங் களை என் பெயருக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கெல் லாம் தக்க முறையில் மறுமொழி எழுதி அனுப்பி வைத்தேன். பல பெருமக்கள் நேரில் வந்து இரக்கம் தெரிவித்து ஆறுதல் கூறினர். அண்ணாவின் மறைவுக்குறித்து இரங்கல் தெரிவிக்க இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள்,8.2.69 அன்று சென்னை வந்தார்கள். முதலமைச்சர் என்ற முறையில், நான் விமானம் நிலையம் சென்று அவரை வரவேற்றேன்.அவர் விமான நிலையத்திலிருந்து அண்ணாவின் வீட்டிற்கு நேரே சென்று இராணி அம்மையாருக்கு ஆறுதல் கூறி னார்கள். 9.2.69 அன்று, அண்ணாவின் மறைவுகுறித்து மாபெரும் இரங்கற்கூட்டம், சென்னைக் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரங்கல் கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். கூட்டத்தில் பிரதமர் இந்திராகாந்தி, ஆளுநர் உஜ்ஜல் சிங், காமராசர், மூதறிஞர் இராசாசி, பக்தவத்சலம், பிரமானந்த ரெட்டி, இலட்சுமணசாமி முதலியார், ம.பொ.சிவஞானம், குன்றக்குடி அடிகளார்