பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.மு. கழகம் . 487 பின்னர் நாங்கள் சப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்குப் போய்ச் சேர்ந்தோம். டோக்கியோ நகரில் சப்பான் மன்னரின் அரண்மனை, முக்கியமான சில பல்கலைக் கழகங்கள், சிறப்பான மருத்துவமனைகள், மிகப்பெரிய தொழிற்சாலைகள், புத்தர் கோயில்கள், துறைமுகம் போன்றவற்றைப் பார்வையிட்டோம். சப்பானிய நாடகங்களையும், நடன அரங்குகளையும் கண்டுமகிழ்ந்தோம். அடுத்து ஆங்காங் நகர் போய்ச்சேர்ந்தோம். அங்கு மின்னணுப்பொருள்கள், ஆடை வகைகள், அணிமணிகள் போன்றவற்றைக் கடைகளில் வாங்கினோம். சீன நாட்டுப் பொருள்கள் ஏராளமாக அங்குக் கிடைக்கப்பெற்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் அங்குப் பெரிய பெரிய கடைகளை வைத்து நடத்திக்கொண்டு வந்ததைக் கண்டோம். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த சிறப்புக் கூட்டத்திலும், விருந்திலும் நாங்கள் கலந்துகொண்டோம். வரவேற்புக் கூட்டத்தில் நான் தமிழ் பற்றியும், தமிழர் நிலைபற்றியும் சொற்பொழிவாற்றினேன். நண்பர் அப்துல் சமத் அவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் நாங்கள் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகர் போய்ச் சேர்ந்தோம். அங்குள்ள மன்னர் அரண்மனை, புத்தர் கோயில்கள், வணிகக் கூடங்கள், படகில் செல்லும் கால்வாய்ப் பகுதிகள் போன்றவற்றைப் பார்வையிட்டோம். அங்கிருந்த இந்திய நாட்டுத் தூதர் எங்களுக்கு விருந்து ஒன்று ஏற்பாடு செய்து, சிறப்பான வரவேற்பை அளித்தார். பாங்காக் பயணத்தை முடித்துக்கொண்டு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர்போய்ச் சேர்ந்தோம். கோலாலம் பூரில் அமைச்சர்கள் சிலரைக் கண்டு அளவளாவி இருந் தோம். பல்கலைக் கழகம், மருத்துவமனை, இரப்பர்