502 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் வெற்றியைப் பெற்றது. அடுத்து நடைபெற்ற கோவை நாடாளுமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல், சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றிலும் அ.தி.மு.கழகம் வெற்றிபெற்றது. 1974ஆம் ஆண்டில், புதுவை மாநிலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.கழகம் பெரும் பான்மையான இடங்களில் வெற்றிபெற்றுப் புதுவை மாநில அரசைக் கைப்பற்றியது. தி.மு.கழகத்திலிருந்து அடிமட்டத் தொண்டர்கள் பலரும் அ.தி.மு.கழகத்தில் இணைந்துவிட்டதாலும், பொதுமக்க ளின் நல்லாதரவு அ.தி.மு.கழகத்திடம் பெருவாரியாக இருந்துவந்ததாலும், இடைத்தேர்தல்களிலும், பொதுத் தேர்தல்களிலும், தி.மு.கழகத்திற்குப் பெருத்த சரிவு ஏற்பட்டது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் செல்வாக்கே மிக ஓங்கி எங்கணும் வளரத் தலைப்பட்டது. மதுரைப் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு டாக்டர் பட்டம் பெறுதல் மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் மு. வரதராசன் அவர்கள் பணிபுரிந்துவந்த காலத் தில், எனக்கு மதிப்புறு டாக்டர் பட்டத்தைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக வழங்கப் பெருமுயற்சி எடுத்துக்கொண் டார். அவருடைய விருப்பத்திற்கு இணங்க, மதுரைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழு, எனக்கு மதிப்புறு டாக்டர் பட்டத்தை வழங்க ஒரு மனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. துணைவேந்தர் டாக்டர் மு. வரதராசன் அவர்கள், எனது இசைவைப் பெற்றதற்குப்பிறகு, தனிப் பட்டமளிப்பு விழாவிற்குச் சிறப்பான முறையில் ஏற்பாடுகளைச் செய்தார்.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/519
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
