பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட இயக்கத்தொடர்பு சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாடு 43 1929-இல்,பட்டுக்கோட்டையில், "முதலாவது மாகாண சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாடு" நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு எஸ்.குருசாமி தலைமை தாங்கினார். கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்தார். அப்போது இளம் மாணவனாக இருந்த நான் என் தந்தையாரோடு சென்று பார்வையாளனாக மாநாட்டில் கலந்துகொண்டேன். அந்த மாநாட்டில்தான் பகுத்தறிவு இயக்கத் தந்தை பெரியார் அவர்களை நான் முதன்முதலாக நேரில் கண்டேன். அப்போது அவருக்குத் தாடியில்லை. அப்போது அவர் முரட்டு மீசையோடும், எடுப்பான தோற்றப்பொலிவோடும், முரட்டுக் கதர் உடைகளை அணிந்துகொண்டும், மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டும், கையில் பெருத்த தடியைத் தாங்கிய வண்ணமும், மார்பில் வண்ணச் சால்வையைப் போர்த்திய படியும் காட்சி அளித்தார். மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு இருந்ததை நான் கண்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் பேசிய பேச்சுக்கள் எனது நினைவில் தங்கவில்லை; ஆனாலும் கண்ட காட்சிகள் மட்டும் கனவில் கண்டவை போல என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. 1931இல், நீதிக்கட்சியின் அமைச்சராக இருந்த சர். பி.டி. இராசன் அவர்களும், சட்ட மன்ற உறுப்பினராக இருந்த சர். கிருட்டிணநாயர் அவர்களும், பட்டுக்கோட்டைக்கு உயர்நிலைப் பள்ளிக்கான அடிக்கல் நாட்ட வருகை தந்தனர். ஊர்வலத்தில் விரைவாகச் சென்ற அவர்களின் காரின் பின்னால், பொதுமக்கள் ஓட்டமும், நடையுமாகச் செல்ல வேண்டியிருந்தது. நானும், இளவல் செழியனும் எங்கள் தந்தையாரின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு ஓடினோம். அப்போது எங்கள் தந்தையார் எங்களிடம், நீங்களும் நன்றாகப் படித்துப் பட்டம் பெற்றுப் பெரும் பதவியைப் பெறுவீர்களே