தி.மு. கழகம் பெரியார் ஏற்பாடு செய்த பாராட்டுக்கூட்டம் 505 நான் மதுரைப் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு (டி.லிட்.) டாக்டர் பட்டம் பெற்றமை குறித்துப் பகுத்தறிவு இயக்கத் தந்தை பெரியார் அவர்கள், சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள கலையரங்கில், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் சிறப்புக் கூட்டம் ஒன்றினை 1972 இல் ஏற்பாடு செய்தார். கூட்டத்திற்குப் பெரியார் அவர்கள் தலைமை தாங்கி னார். பெரியார் அவர்கள் எனக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டு இதழ் ஒன்றினைப் படித்து அளித்து, என்னைப் பற்றிப் பெரிதும் புகழ்ந்துபேசினார்கள். அவர் பேசும்போது குறிப்பிட்டதாவது:- "நாவலர் தலைசிறந்த பகுத்தறிவுவாதிகளில் ஒருவர். இப்போதுதான் அவர் பகுத்தறிவுவாதி என்பது இல்லை. மாணவப் பருவம் முதற்கொண்டே நாவலர் பகுத்தறிவாள ராகச் சிறந்து விளங்கிவருகிறார். நமது நாவலர் மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தையார் பெரிய வருமானம் தரும் பதவி எதிலும் இருக்கவில்லை என்ற போதிலும், நாவலர் தமது கல்வியை முடித்துக்கொண்டதும், நேராக என்னிடம் வந்தார். நான் இன்றைக்கு இருப்பதைப்போல அன்றைக்கு இருக்க வில்லை. இன்றைக்குப் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லோரும்கூட என்னிடம் வந்து, “ஐயா! எனக்கு உதவி செய்யுங்கள்! உரிய வேலையில் அமரப் பரிந்துரை செய்யுங்கள்!" என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு உரிய உதவிகளைச் செய்கிறேன். ஆனால், அன்று நான் அப்படிப்பட்ட நிலையில் இல்லை.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/522
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
