மக்கள் தி.மு. கழகம் 529 அறிஞர் அண்ணா காலத்தில் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வந்த கழகம், கலைஞர் கருணாநிதி தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, தோல்விக்குமேல் தோல்வியைப் பெறுவானேன்? 1971 பொதுத்தேர்தலில் தி.மு.கழகம் பெருவெற்றி பெற்றதற்கு அடிப்படைக் காரணம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் செல்வாக்கும், புகழும், உழைப்புமே ஆகும். கலைஞரின் தலைமையில் பொது மக்களுக்கு வெறுப்பும், அருவருப்பும் ஏற்படத் தொடங்கின. அதன் விளைவாக, திண்டுக்கல் இடைத்தேர்தல். கோவை சட்டமன்ற நாடாளுமன்ற இடைத்தேர்தல்கள். புதுவை மாநிலப் பொதுத்தேர்தல் ஆகியவற்றில் தி.மு.கழகத்திற்குப் படுதோல்விகள் ஏற்பட்டன. கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையில் இயங்கிவந்த தமிழக ஆட்சி, எட்டுக் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்பட்டுக் குடியரசுத் தலைவரால் கலைக்கப்படுவதற்குக் காரணம், முழுக்க முழுக்க அவரே ஆவார். கழகத்திற்குப் பெருமையும், புகழும், வெற்றியும் ஏற்படும் போது, அவற்றிற்குப் பொறுப்பு ஏற்று மகிழ்வது எவ்வளவு நியாயமோ, அவ்வளவு நியாயம் ஆகும், கழகத்திற்குச் சரிவும், இழிவும், தோல்வியும் ஏற்படும்போது, அவற்றிற்குப் பொறுப்பு ஏற்று வருந்த வேண்டும் என்பது. கழகத் தலைமையின் போக்கிலே மாற்றம் ஏற்படாவிட்டால், கழகம் விரைவில் அழிந்துபோக இடம் ஏற்பட்டுவிடும் என்ற எண்ணம் கழக முன்னணித் தலைவர்களிடையே ஏற்பட்டது. கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், கழகப் பொரு ளாளர் ஆகியோர் பதவிகளை விட்டு இறங்கி வந்து, தொண்டர்களாக இருந்து கழகத்தினைத் தூக்கி நிறுத்தப் பாடுபடுவது நல்லது என்ற கருத்து அவர்களால் எடுத்து
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/550
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
