530 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் வைக்கப்பட்டது. ஆனால் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள கலைஞர் கருணாநிதி மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் கழகத்தை விட்டு வெளியேறிவிடுவது என்ற முடிவுக்கு நான் வந்தேன். மற்ற நண்பர்களும் அதே முடிவுக்கு வந்தார்கள். அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விளைவுதான், ம.தி.மு. கழகத்தின் தோற்றமாகும். நான் எம்.ஏ. படித்து முடித்ததற்குப் பிறகு, பெரியாரின் ஈரோட்டுப் பாசறைக்குத்தான் சென்றேன். அன்றிலிருந்து இன்றுவரை கழகத்தின் ஆக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு வருகிறேன். தமிழகத்தின் பட்டி தொட்டி களிலெல்லாம் சுழன்று சுற்றி வந்து, கழகக் கொள்கைகளைப் பரப்பி வருகிறேன். பெரியாரோடு நான் இருந்தபோது, அவர் கிழித்த கோட்டைத் தாண்டியதில்லை. அறிஞர் அண்ணா வின் தலைமையின்கீழ் பணியாற்றியபோது, கட்டுப் பாட்டுக்கு ஊறு தேடாமல், கழகத்திற்குக் களங்கம் கற்பிக் காமல் கடமையாற்றி வந்தேன். நான் கலைஞரோடு சேர்ந்து பணியாற்றி வந்தபோதும், கழகத்தின் கருத்துக்கு மாறுபாடாக எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை, இப்பொழுது, தி.மு.கழகத்தை விட்டு- வெளியேறுவதைத் தவிர, வேறு வழி எதுவும் தென்படவில்லை என்ற நிலை ஏற்பட்டதனால், 'பட்டதெல்லாம் போதும்; படமுடியாது இனித்துயரம்' என்று சொல்லிவிட்டு வெளியேறி வந்து விட்டோம். நான் தி.மு.கழகத்தை விட்டு வெளியேறுவது என்று தீர்மானித்தவுடன், என்னிடம் இருந்த கார், ரூ.28 இலட்சம் கணக்கு, காசோலைப் புத்தகம் போன்ற எல்லாவற்றையும் தி.மு.கழகத் தலைமை நிலையத்திடம் ஒப்படைத்து விட்டேன்.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/551
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
