பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 என்னும் பொய் - வஞ்சகம் வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் - சூது -சுயநலம் என்பவை வாரா. புகழ் அவரைத் தேடி ஓடிவரும்; அவர் புகழைத் தேடி ஒருபோதும் ஓடியதில்லை! அவர், சலுகை என்ற பெயரால் சரியில்லாத தவற்றினையோ, அன்பு என்ற பெயரால் ஆகாத சலுகையினையோ, நட்பு என்ற பெயரால், தகுதியில்லாதவர்க்குப் பதவியைத் தருகின்ற செயலையோ, நன்கொடை என்ற பெயரால் நள்ளிருள் பேரத்தையோ கனவிலும் சரி, நனவிலும் சரி எண்ணிப் பார்க்காதவர்! நாவலர் அவர்களின் வழிப்பயணத்தில் என்னை நான் முழுக்க முழுக்க இணைத்துக் கொண்டுவிட்டேன். உயர் பேராண்மை என்பது, நாவலருக்கே உரிய சொந்தமும் சொத்தும் என்பேன். நாவலர், இலக்கிய வழிவந்த ஓர் இலக்கண மனிதர்! அவரின் செயல்பாடுகளில் பொய்யற்ற நடப்பே இருக்கும்; போலியான நடிப்பு இருக்காது. "அண்ணாதான் நமது கழகத்தின் ஆணிவேர்; நாம் எல்லோரும் அவருக்குப் பக்கவேர்களாகவும் சல்லி வேர்களாகவும் இருக்கிறோம். அண்ணாதான் நமக்கு ஆசான், வழிகாட்டி; அறிவுரை கூறுபவர்!" என்று நாவலர் அடிக்கடி சுட்டிக் காட்டுவார். அவர், அண்ணா தந்த கொள்கை, நோக்கம், திட்டம், நெறி, வழி ஆகியவற்றை என்றென்றும் கட்டிக் காத்து வருபவர். என்னைப் போன்ற புலவர்கள் பலரும், கவிஞர்கள் பலரும், பேராசிரியர்கள் பலரும் நாவலரின் தொண்டுக்குத் துணையாக நிற்போம். அவரோடு சேர்ந்து தமிழ்ப் பண்பாட்டைத் தூக்கிக் காக்கிற தூணாகவும் இருப்போம்.