536 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் பொதுக்குழு உறுப்பினர்கள் 125 பேர்களும்,சிறப்பு அழைப்பினர் 18 பேர்களும் கூட்டத்தில் கலந்து கொண்ட னர். முக்கிய முன்னணித் தோழர்கள் கழக அமைப்பு, கழக வளர்ச்சி, கொள்கை பரப்புதல், நிதிசேர்த்தல், பொதுத் தேர்தலில் எவ்வாறு பங்கு கொள்வது என்பவை பற்றிப் பேசினார்கள். தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன. . 1977 சூன் திங்களில் நடைபெறக்கூடிய பொதுத் தேர் தலில், மக்கள் தி.மு.கழகம் போட்டியிடுவதில்லை என்றும், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை ஏற்று, கலைஞரின் தி.மு.கழகத்தை எதிர்க்கும் அ.இ.அ.தி.மு.கழகக் கூட்டணி யின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ. . .இ. அ.தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், ம.தி.மு.கழகத்திற்குப் பத்து சட்ட மன்றத் தொகுதிகளை ஒதுக்கித்தர முன்வந்தார் என்றாலும், ம.தி.மு.கழகம் போதுமான வளர்ச்சியையும், நிதி வசதியையும் பெறாதிருந்த நிலையில், கழகத்தவர் யாரும் போட்டியில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. 1977 பொதுத்தேர்தலும் புதிய ஆட்சியும் மக்கள் தி.மு.கழகம் எடுத்த முடிவிற்கு இணங்க, 1977 பொதுத்தேர்தல், அ.இ.அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் களுக்கு ம.தி.மு.க தோழர்கள் ஆங்காங்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். தேர்தல் பிரச்சாரப்பணிகளில் நானும், ம.தி.மு.க.வின் முன்னணிப் பேச்சாளர்களும் தீவிரமாக ஈடுபட்டோம். பல்வேறு இடங்களில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டோம்.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/557
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
