பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் அறநெறியில் ஆட்சி புரிந்து, பொதுமக்களின் நம்பிக்கையை யும், நன்மதிப்பையும், அன்பையும், ஆதரவையும் பெற்றுப் பெருமையோடும். புகழோடும் செயல்படவேண்டும் என்று மக்கள் தி.மு.கழகம் விரும்புகிறது. அண்ணாவின் கனவுகள் நனவாக வேண்டும். அண்ணா அமைத்த சனநாயகப் பண்போடுகூடிய பாங்கான ஆட்சி மீண்டும் மலரவேண்டும். அண்ணா வகுத்துத் தந்த கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் புதிய ஆட்சி நல்லாதரவு தந்து, அவற்றையெல்லாம் நிறைவேற்றி வைக்க வேண்டும். புரட்சித்தலைவர் அவர்களின் சீரிய தலைமை யின் கீழ் அமைந்துள்ள இந்தப் புதிய ஆட்சியினர்க்கு, மக்கள் தி.மு. கழகத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்." இறுதியில் பேசிய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் என்னைப் பற்றிக் குறிப்பிட்டுச் சில கருத்துக்களைக் கூறினார். அவற்றின் சுருக்கம் வருமாறு: "அறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தபோது, நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். மருத்துவமனையில் இருந்த என்னிடம் நமது நாவலரின் இளவல் செழியனை அனுப்பிவைத்து, அறிஞர் அண்ணா அவர்கள் தாம் தயாரித்து வைத்திருந்த அமைச்சர்களின் பட்டியலையும், அவர்களுக்கு அளிக்க இருந்த பொறுப்புக்களின் பட்டியலையும் காட்டி வரும்படி கூறியிருந்தார். அவை பற்றி நான் என்ன கூறுகிறேன் என்பதைக் கேட்டுவா என்று சொல்லியனுப்பியிருந்தார். செழியன் அவர்கள் என்னை வந்து மருத்துவ மனையில் பார்த்தார்.