பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட இயக்கத்தொடர்பு எங்கள் வீட்டுத் திருமணம் 49 1939 இல், என் அண்ணன் சௌரிராசன் - இராமாமிர்தம், என் தமக்கை நாடியம்மாள் -ஆவுடையப்பன் ஆகியோரின் சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணங்கள், தஞ்சை நகரில் நடைபெற்றன. எங்கள் குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்றுப் பெரியார் அவர்கள் திருமணங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள். திருமண விழாவில் எஸ். குருசாமி, அ.பொன்னம்பலனார், கே.கே.நீலமேகம், மாயவரம் சி. நடராசன், நாகை காளியப்பன், பட்டுக் கோட்டை கே.வி. அழகிரிசாமி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள். நீதிக்கட்சியின் 15ஆவது மாகாண மாநாடு 1940இல், நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், இடைநிலை வகுப்பில் பயின்று கொண்டிருந்தபோது, திருவாரூரில் நீதிக்கட்சியின் 15ஆவது மாகாண மாநாடு பெரியார் அவர்களின் தலைமையின் கீழ் 1940 ஆகஸ்டுத் திங்கள் 24,25ஆகிய நாட்களில் நடைபெற்றது. மாநாட்டில் அறிஞர் அண்ணா, கி.ஆ.பெ. பெ. விசுவநாதம், பட்டுக் கோட்டை அழகிரிசாமி, டபிள்யு.பி.ஏ. சௌந்தரபாண்டி- யன்,எஸ் குருசாமி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், இராசா சர் முத்தையா செட்டியார், சர்.பி.டி. இராசன், நாவலர் எஸ்.எஸ். பாரதியார், த.வே.உமாமகேசுவரனார், பி. பாலசுப்பிரமணியம், பி. இராமச்சந்திரரெட்டி போன்ற பல தலைவர்கள் கலந்துகொண்டார்கள். மாநாடு இரண்டு நாட்கள் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து மாநாட்டில் கலந்து கொண்டார்கள். அண்ணாமலை நகரிலிருந்து நான், செழியன், எங்களுடன் ஏராளமான மாணவர்கள் அந்த மாநாட்டிற்குச் சென்று கலந்து கொண்டோம். அந்த மாநாட்டில்தான் "தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற முழக்கம், ஆந்திர-கருநாடக - கேரளப் பிரதிநிதிகளின்