அ.இ.அ.தி.மு.கழகம் 565 ஆக்கியவரும் அறிஞர் அண்ணா அவர்களே ஆவார். பொதுச் செயலாளர் ஆவதற்குரிய தகுதியும், திறமையும் டாக்டர் நாவலரிடத்திலே உண்டு என்பதைக் கண்டறிந்து அதனை உலகுக்கு உணர்த்தியவர் அறிஞர் அண்ணா அவர்கள். அவர் காட்டிய வழியைப் பின்பற்றியே இன்று நானும், நீங்களும் நடந்து கொள்கிறோம். டாக்டர் நாவலர் அவர்கள், அறிஞர் அண்ணா உருவாக்கிய கழகத்தில் முன்னணித் தலைவர்களில் முக்கியமான ஒருவராக இருந்து பாடுபட்டு வந்த நேரத்தில், நான் அண்ணாவின் கழகத்தில் ஒரு சாதாரணத் தொண்டனாகச் சேர்ந்து, கடமையாற்றும் ஒருவனாகவே பணிபுரிந்து வந்தேன். அறிஞர் அண்ணா அவர்களின் அரிய அறிவுரை களையும், டாக்டர் நாவலர் அவர்களின் ஆழம் மிக்க கருத்துரைகளையும், நான் அடிக்கடி கேட்டுத்தான், இன்று இப்படிப்பட்ட அரசியல் நிலைக்கு ஆளாகி இருக்கிறேன். டாக்டர் நாவலர் அவர்களின் சிந்தனையறிவுத் திறன், செயலாற்றல் திறன், சிறந்த பண்பாடு, எளிமையான போக்கு, அன்போடுகூடிய அடக்கம், ஆரவாரமற்ற அமைதி, குழு அமைக்காத கொள்கை, கொள்கைப்பற்று. உயர்ந்த குறிக்கோள், விடாமுயற்சி, பேரூக்கம், கடமை ஆர்வம், கண்ணியமான பேச்சு போன்றவை என் உள்ளத்தை அந்த நாளிலிருந்து பெரிதும் கவர்ந்தவையாகும். நான் மதிப்பும், மரியாதையும் செலுத்தக் கூடிய தகுதி வாய்ந்த தலைவர்களில் நாவலர் முக்கியமான ஒருவர் ஆவார். அப்படிப்பட்ட நாவலரின் கீழ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிநடை போட்டுப் பொலிவோடு விளங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு!!"
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/586
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
