566 கோவை மாணவர் கழக மாநாடு வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் அ.தி.மு. 1978 ஆம் ஆண்டு, கோவையில், அ.இ.அ. கழகத்தைச் சார்ந்த மாணவர் கழகத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கழக மாணவர்கள் பெருந்திரளாக வந்து மாநாட்டில் கலந்து கொண்டார்கள். மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. கழக மாணவர்களும், கழகத்தின் முன்னணிப் பேச்சாளர் களும் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்கள். இறுதியில் புரட்சித் தலைவர் அவர்களும், நானும் சிறப்புச் சொற் பொழிவுகள் ஆற்றினோம். நான் பேசும்போது குறிப்பிட்டதாவது:- அ.இ.அ.தி.மு.கழகத்தின் கொள்கை - குறிக்கோள் - கோட்பாடு ஆகியவற்றில் நீங்காப்பற்றும், தணியா ஆர்வமும் கொண்டுள்ள மாணவ நண்பர்கள் இந்த மாநாட்டில் பெருந் திரளாகக் குழுமியிருக்கும் காட்சியைக் காண, நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். வயலில் பயிர்களைச் செழுமையாக வளர்க்க நாற்றங்கால் எப்படி அடிப்படையாகப் பயன்படுகிறதோ, அப்படியே அ.இ.அ.தி.மு.கழகத்தில் சிறந்த அறிவாற்றல் மிக்க தலைவர்களை உருவாக்க, மாணவர் கழகம் அடிப்படை யாகப் பெரிதும் பயன்படுகிறது. மாணவர்கள் கழகப்பற்றோடு, தாங்கள் பெறும் கல்வியின் மூலம், எல்லாத் துறைகளிலும் சிறப்புற்று விளங்குவதற்கு ஏற்ற முறையில், அறிவுத்திறனையும், ஆற்றல் திறனையும் பெரிதும் வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாத் துறை களிலும் கழகத்திற்கு வழிகாட்டியாக இருந்து, அதனை எதிர்காலத்தில் வெற்றிகரமாக நடத்திச் செல்வதற்கு ஏற்ற வல்லுநர்களாய் மாணவர்கள் திகழவேண்டும்.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/587
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
