572 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் தாடி மார்பில் விழும்! மண்டைச் சுரப்பை உலகு தொழும்! மனக் குகையில் சிறுத்தை எழும்!' என்றும், 'வயதினில் அறிவினில் பெரியார்! வாய்மைப் போருக்கு என்றும் இளையார்! அவர்தான் பெரியார்' என்றும் சிறப்பித்துச் சொன்னார். " கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடும்போது, "ஊன்றி வரும் தடிசற்று நடுங்கக்கூடும்! உள்ளத்தின் வித்தினிலே நடுக்கமில்லை! தோன்ற வரும் வடிவினிலே நடுக்கந் தோன்றும்! துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை! வான்றவழும் வெண் மேகத்தாடி ஆடும்! வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை! ஆன்றவிந்த பெரி யோர்க்கும் பெரியார்! எங்கள் அய்யாவுக்கு இணை அவரே! மற்றோர் இல்லை" என்று புகழ்ந்துபாடினார். பெரியார் அவர்கள், தமிழ்ச் சமுதாயம் மானமுடையதாகவும், அறிவுடையதாகவும் அமையப் பாடுபடுவதே தம் வாழ்க்கையின் குறிக்கோள் என்று சொல்லி வந்தார். அவர் மக்கட் சமுதாயத்திற்குப் பற்பல நல்லுரைகளையும், அறிவுரைகளையும் வழங்கி வந்தார். சமுதாய வாழ்க்கையில் பக்தி என்பது அறவே வேண்டாம்; ஒழுக்கத்தான் முக்கியமாக வேண்டும். பக்தி என்பது தனிச் சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் சமுதாயத்திற்கு இழப்பு ஏதும் இல்லை; ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் சமுதாயமே பாழ்பட்டுப் போய்விடும். பகுத்தறிவும், தன்மான உணர்வும் மட்டுமேதான் மனித வாழ்வை மேம்படுத்தும். கற்பனைக் கடவுளை மறக்கவேண்டும். உயிரோடு உலாவும் மனிதனைப் பற்றி மட்டும் நினைக்கவேண்டும். கர்மாவை நம்புபவன் ஒருநாளும் கடைத்தேற மாட்டான். எவரும் விதியை நம்பி மதியை இழக்கக் கூடாது. மனித அறிவினால் விளைந்த தீய விளைவுகள் அனைத்தையும் மனித அறிவினால் மட்டுமே அகற்ற முடியும். சீர்திருத்தம் என்பது
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/593
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
