பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியலில் நேரடி ஈடுபாடு 57 அவர்களும், பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்களும் எங்களுடன் வந்து, ஆங்காங்குப் பொதுக்கூட்ட ஏற்பாடு களைச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டார்கள். கூட்டங்களில் நான் பேசும்போது, திராவிட நாகரிகத்தின் சிறப்பு, திராவிடப்பண்பாட்டின் மேன்மை, திராவிட நாடு தனி நாடாக ஆகவேண்டியதன் இன்றியமையாமை, சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம், சாதி மத பேதமற்ற சமுதாயம் உருவாகவேண்டியதன் அவசியம், தமிழ் மொழி யின் தனிப்பெருஞ் சிறப்புக்கள், இந்தி மொழித் திணிப்பை எதிர்க்க வேண்டியதன் இன்றியமையாமை ஆகியவை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பேசி வந்தேன். சேலம் திராவிட மாணவர் மாநாடு திராவிட மாணவர் இயக்கத்தின் சார்பாகச் சேலத்தில், 'திராவிட மாணவர் மாநாடு' மிகச்சிறப்பான முறையில் 1944இல் நடைபெற்றது. நான் அந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கினேன். சேலம் மாணவன் கண்ணப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார். க. அன்பழகன், ஏ.பி. சனார்த்தனம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். சேலத்தி லிருந்தும், சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள மாவட்டங் களிலிருந்தும் திரளான மாணவர்கள் வந்து, மாநாட்டில் பங்குகொண்டார்கள். மாநாட்டில், நான் தலைமையுரை ஆற்றியபோது, குறிப்பிட்ட கருத்துக்களின் சுருக்கம் வருமாறு: சுமத்தி "திராவிட இயக்கம் மாணவர்களை அரசியலில் இழுத்துக் கெடுப்பதாக மாற்றுக்கட்சியினர் குற்றம் வருகின்றனர். திராவிட இயக்கம் மாணவர்களை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுக்கவும் இல்லை; அவர்களை எந்த வகையிலும் கெடுக்கவும் இல்லை. மாணவர்கள் தங்களைப்