அரசியலில் நேரடி ஈடுபாடு 59 மாணவர்கள் அரசியலைப்பற்றி அறிந்துகொள்ளத்தான் வேண்டும்; ஆனால் அவர்கள் தங்கள் கல்வி பாழாகக்கூடிய வகையில் நேரடியாகப் பங்குகொள்ளக்கூடாது என்கின்றனர். பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இந்த மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள். புத்தம்புதிய பொலிவு மிக்க, வலிவுமிக்க, வளம்மிக்க திராவிடத்தை உருவாக்க, திராவிட இயக்கத் தலைவர்கள், திராவிட உணர்ச்சிகொண்ட அறிவாற்றல் மிக்க மாணவ சமுதாயத்தினரை நம்பித்தான் வாழ்கிறார்கள். பெரியாரின் பகுத்தறிவு நெறிமுறைக்கொள்கைகளும், பேரறிஞர் அண்ணாவின் சனநாயக அரசியல் நெறிமுறைக் கொள்கைகளும் திராவிட மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக அமைவனவாகும். - பகுத்தறிவு சீர்திருத்தக் கொள்கைகளையும், திராவிட அரசியல் கோட்பாடுகளையும் மக்களிடையே பரவலாகப் பரப்புகின்ற பெரும் பணியினை, மாணவர்கள் சிறப்பாகவும். செம்மையாகவும் செய்ய முன்வரவேண்டும். அதற்கு இந்த மாநாடு பெரிதும் பயன்படவேண்டும்." இலால்குடி திராவிட இளைஞர் மாநாடு திருச்சி மாவட்டம் இலால்குடியில், திராவிட இளைஞர் களின் மாநாடு, 1944 சூன் திங்கள் முதல் வாரத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு என்னைத் தலைமை தாங்கும்படி பெரியார் அவர்கள் வற்புறுத்தினார். நான் அவரது விருப்பத்தை ஏற்று மாநாட்டிற்குத் தலைமை தாங்கினேன். மாநாட்டில், பெரியார், அறிஞர் அண்ணா, என்.வி. நடராசன், அ.பொன்னம்பலனார், தி.பொ. வேதாச்சலம், ஜி.பி. சோமசுந்தரம், கே.கே.நீலமேகம், க. அன்பழகன்,
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/72
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
