பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிடர் கழகம் 73 உரையாற்றும்படி அவரை நான்' கேட்டுக்கொண்டேன். அவரும் பெருந்தன்மையோடும், விருப்பத்தோடும் இசைவு தந்தார். பொதுக்கூட்டம் கோவை சிதம்பரம் பூங்காவில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. செய்யப்பட்டது. கூட்டத்திற்கு, சென்னை வழக்கறிஞர் கே.என். சிவராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். நான் டாக்டர் அம்பேத்கார் அவர்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினேன். டாக்டர் அம்பேத்கார் அவர்கள் 90 நிமிடங்கள் பேசினார். அவர் பேசியபோது வருணாச்சார சாதி பேதங்களைக் கண்டித்தும், ஆரியப் பார்ப்பனர்களின் சூது, சூழ்ச்சி பற்றி விளக்கியும், தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதுபற்றியும், சமத்துவ சமுதாயம் ஏற்படவேண்டிய அவசியம் பற்றியும், எவ்வாறு பகுத்தறிவு நெறிக்கு ஆக்கந்தரவேண்டும் என்பது பற்றியும் விரிவானமுறையில் விளக்கங்கள் பல தந்து பேசினார். அவரது பேச்சு எல்லோரையும் கவரத்தக்க வகையில் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தஞ்சை திராவிட மாணவர் மாநாடு தஞ்சையைச் சேர்ந்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மண்டபத்தில், 1944 செப்டம்பர் 26ஆம் நாள், திராவிட மாணவர் மாநாடு ஒன்று திராவிட மாணவ இயக்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டிற்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். பெரியார் அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார்கள். மாநாட்டில் அறிஞர் அண்ணா, நான், க. அன்பழகன், இரெ.இளம்வழுதி, கே.ஏ. மதியழகன், புலவர் பெரியசாமி, புலவர் அரங்கசாமி, மூவலூர் இராமாமிர்தத்தம்மையார், கே.கே.நீலமேகம் .