பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

விஜயலக்ஷ்மி பண்டிட்


உயர்வுக்காக ஆற்றிய பணிகளாலும், அப்போது எதிர்ப்பட்ட துன்பங்களும், வேதனேகளும் தந்த அனுபவங்களினாலும் நன் மதிப்பைப் பரிசாகப் பெற்றவள் அவள்.

சுதந்திர இந்தியாவின் சக்தியை உலகுக்கு நிரூபிப்பதற்காகப் பாடுபட்டு வரும் ஜவாஹர்லால் நேருவுக்குச் சரியான தங்கை தான் என்பதை நிலைநாட்டி விட்டாள் விஜயலக்ஷ்மி.

“நீ அரசியல்வாதியாக மாறியிருப்பதை உணர்ந்தேன். நீ பெண்ணாகப் பிறந்துவிட்டது அதற்குத் தடையாக இருக்குமோ என்று எண்ண வேண்டாம். தங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காக, ஆண்கள் சாதித்துள்ள செயல்களைப் போலவே, எத்தனையோ பெண்களும் தீவிரப் பங்கு ஏற்று அரிய பெரிய சாதனைகளை நிறைவேற்றியுள்ளனர்.ஒரு சிலர் ஆண்களே விட அதிகமாகச் சிறந்து விளங்குவதையும் காணலாம். இதெல்லாம் நாட்டின் மீது நாம் கொள்ளுகிற பற்றுதல், அதன் செயல்களில் நாம் காட்டுகிற ஆர்வம்— முதலியவைகளைப் பொறுத்தது தான். ஆண்—பெண் என்கிற பேதம் ஒரு பெரிய தடை அல்ல. பார்க்கப்போனால், உள்ளத்தில் உறுதி கொண்டுவிட்ட ஒரு பெண்ணின் ஆதிக்கம் ஆணின் வலிமையைவிட வலியதாக, பயன்கள் பல தருவதாக அமையும்.ஆகவே, உனது முன்னேற்றத்துக்குத் தேவையான வாய்ப்புகள் உனக்காகக் காத்து கிற்கின்றன”.

இவ்விதம் பண்டித மோதிலால் நேரு தமது இளைய மகள் கிருஷ்ணுவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறித்