பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

9


திருக்கிறார். தந்தையின் ஆசிஉரை புதல்வி விஜயலக்ஷ்மியின் வாழ்வில் பரிபூரண வெற்றியாக மிளிர்வதை எல்லோரும் உணரமுடியும்.

சுதந்திரப் போரில் தீவிரப் பங்கு பெற்று, மூன்று தடவைகள் சிறை வாழ்க்கை அனுபவித்தாள் விஜயலக்ஷ்மி, இந்தியாவிலேயே முதல் பெண் மந்திரி என்ற அந்தஸ்து அவளுக்குக் கிட்டியது, ஐக்கிய மாகாண மந்திரி சபையில் அவள் இடம் பெற்றபோது, சுதந்திர இந்தியாவின் அயல் நாட்டு ஸ்தானிகராக ரஷ்யாவிலும், அமெரிக்காவிலும் பணி புரியும் பேறு அவளுக்குக் கிட்டியது. உலகத்திலேயே ஒரு பெண் அடையக்கூடிய மிக உயர்ந்த ஸ்தானம்-இதுவரை எந்தப் பெண்னும் பெற்றிராத தனிப்பெரும் கெளரவம்-என்று போற்றும் வகையில் அவள் ‘ஐக்கியகாடுகள் சபை’யின் தலைமைப் பதவியை அடைந்து விளங்குகிறாள்.

நேரு குடும்பத்தின் வரலாறு இந்திய சரித்திரத்தில் சிறப்பான இடம் பெறும் ஓர் அத்தியாயமாகும். தியாகம், வீரம், தன்னிகரில்லாத் தனிப் பெரும் சேவை, நாட்டுப்பற்று முதலியவற்றின் கதம்பம் நேரு குடும்பக் கதை. அம்மலர்ச் செடியினூடே தகதகக்கும் பொன் இவை போன்றது விஜயலக்ஷ்மியின் வாழ்க்கைவரலாறு.

அத்தியாயம்-2.

விஜயலக்ஷ்மி பண்டிட் 1900-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 18-ம் தேதியன்று அலகாபாத்தில் ‘ஆனந்த பவனம்’ எனும் மாளிகையில் பிறந்தாள். அப்போது ஜவாஹர்லால் நேருவுக்குப் பதினோரு வயது.